கவுதலை

0
36

கொஞ்ச நாளுக்கு முன்னால பயங்கரமான சளி தொல்லை எந்த மாத்திரை மருந்து தின்னாலும் அடங்காமல் பாடாபடுத்துச்சு இருமியிருமி தொண்டையில் புண்னும், சளியுடன் ரத்தமும் சேர்ந்து வர பதறிப்போயிட்டேன்.
அத்த மகன் டேனியல் சரியான தண்ணி வண்டி குசும்புக்காரனும் கூட, என் மேல இரக்கப்பட்டு ஒரு யோசனை சொன்னான். யோவ் அத்தான் உன்னோட சளிக்கு என்னிடம் ஒரு சூப்பர் மருந்து இருக்கு, ஆனால் நீ அதுக்கு ஒத்துக்கிட மாட்ட, வேண்ணா சொல்லும் நான் ரெடி, அடுத்த இரண்டே நாளில் இறங்கிடும் என பகடி செய்தான். ஏளா! உன் அக்காதான் ஏங்கிப்போய் கிடக்கா போய் கொடு, ஆக்கங்கெட்ட கூவை என பல்லைக் கடித்தான்.
கோபப்படாதிக மகேஸ் அத்தான் காமெடி பண்ணல சீரியஸாத்தான் சொல்கிறேன். என சொல்லி சிரித்தான். சரி சொல்லு,
ஒரு ஒல்ட் மன்ங்க் ரம் வாங்கிட்டு வாரும், அதுலதான் விசயமே இருக்குனு சொன்னான் நான் அப்படியானு யோசிக்க ஆரம்பித்தேன்.
டேனி உன் வீட்டுல கேன்டீன் சரக்கு ஸ்டாக் இருக்கு, நான் வாங்கிட்டு வந்தாத்தான் குடுப்பியா!ன்னு கேட்டேன். சிரித்தவன் சரி, சரி இன்னைக்கு வீட்டுக்கு சாப்பிட்டு வாரும் என்று சொல்லிவிட்டான் டேனி.
இருவரும் இரவு 9.30க்கு மேல் மொட்டை மாடியில் மிலிட்டரி சரக்கில் வெண்ணியை கலந்து எனக்கு மட்டும் எடுத்து யாரும் பார்த்து விடாமல் அன்னாக்க கடக் கடக் என்ற சத்தத்துடன பயத்தில்; குடித்து விட்டு எரியும் தொண்டையை தடவியபடி செருமினேன்.
மேலே பனி கொட்டியா இருக்கு இரண்டு பேரும் கீழே வாங்கலே என ஒரு சத்தம் கேட்டது.
இவனுககிட்ட அப்படி என்னதான் இருக்கோ புருஷன் பொண்டாட்டி மாதிரி இப்படி ஒட்டிக்கிட்டு சுத்துரானுகன்னு புரணி பேசுகிறாலுக பொட்டச்சிக எதுக்குட ஊர்வாயில விழுறனு கேட்டா? ஏம்மா தண்ணி, தம்மு, ஏன் சைட் அடிக்க போனாக்க கூட நாலஞ்சு பேரு சேர்ந்து போனா தானா வரும் ஒரு திமிரு அது மாதிரிதான் இதுவும் என்கிறான் என் வீட்டு தடிமாடுஇந்த வார்த்தை என் காதில் கேட்டது.
புதுகுடிகாரன் எனக்கு அப்பப்ப சொல்லாமல் கொள்ளாமல் போதையின் ருசி தொண்டை வரை எச்சி ஊரும் அப்படி வந்திட்டால் அதை ருசிக்காமல் விட மாடN;டன். உடனே அறிப்பெடுத்தவன்போல் அந்த நாலு பேரையும் தேடி ஓடுவேன்.
சாரதி போன் போட்டு ஜான்சனை கூப்பிட கார்த்தியுடன் மாரிமுத்துவுக்கும் கிடைத்தது ஒரு வேட்டை என்று பரபரக்க ஒன்று சேர்ந்தோம், எப்பவுமே மக்கள் அதிகம் வந்து போய் இருக்கும் பெரிய லாலா கடைகளில் கிடைக்கும் கார, மிட்டாய் பண்டங்களை வாங்குவதை விட சிறு பெட்டிக் கடைகளில் கிடைக்கும் கடலை மிட்டாய் ஊறுகாய், சோடா, ஆகியவை எளிதில் வாங்கினேன். மகேஸ், நீ கேட்ட தண்ணி பாட்டிலும் பேப்பர் கப்பும் சேர்த்தே வாங்கிட்டு வந்துட்டேனு வந்தான் சாரதி.
எல்லாஞ்சரி, சரக்கு என்ன பிராண்ட் தெரியுமா? மிலிட்டரி சரக்கு! மூனு மாசத்துக்கு முன்னால என் மாப்பிள்ளைகிட்ட சொல்லி வச்சது இன்னைக்குதான் கண் திறந்து இருக்கு, விடுவேனா, ஒரே அழுக்கா அமுக்கிட்டேன்னு சிரிப்பை உதிர்த்தான்.
இதையெல்லாம் கேட்டுக்கிட்டு இருந்த தன்னை எப்பவுமே பிசியாக காட்டிக் கொண்டு இருக்கும் ஜான்சன் ஓசியில வந்தது தானா, அப்படினா நம்ம அஞ்சு பேருக்கும் பத்தாது கூட இரண்டு பீர் பாட்டிலையும் சேர்த்து வாங்க வேண்டியது தானே என்றான்.
ஜான்சன் எப்பவுமே ஓசியில் கிடைத்தால் தொண்டை வரை குடிப்பவன். ஏன்? என் அப்பன் பங்கையும் சேர்த்து கொடு என்பான், சரியான கஞ்சப்பிசிநாரி வாயாலயே காரியத்தை சாதித்துவிடுவான்.
வாங்க வேண்டியதையெல்லாம் வாங்கியாச்சு எந்த இடத்திற்கு போக என்று கிரிக்கெட் வீரர்களைப் போல் வட்டமாக கைகோர்க்காமல் ஒன்றுமே தெரியாதது போல் மற்றவர்களுக்கும் சந்தேகம் வராதபடி யோசித்தோம் அதுல மாரிமுத்து, அண்ணே! போன தடவ போன இடம் வேண்டாம், தெரிந்த நாளைந்து பயவுள்ளைக பாத்திட்டு போயிருச்சு நல்ல வேளை வீட்டில் போட்டுக் கொடுக்கல என்றான்.
அப்படினா பிரண்ட்ஸ் ஆட்டோவுக்கு போன் போட்டு விவரத்த சொன்னால் அவன் ஒரு அய்டியா குடுப்பான்னு சாரதி போன்போட்டு குமாரு விவரம் இப்படி இப்படி நமக்கு நல்ல இடம் வேணும்னு சொல்ல,.. அண்ணே சவாரிய விட்டுட்டு கூப்பிடுறேன்னு சொல்லி இணைப்பை துண்டித்தான்.
அப்போது ஆட்டோவில் இருந்த பெண்கள் தம்பி உங்களை நம்பித்தான் வாரோம். ஆனால் நீங்க எங்க உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க மாட்டிங்க போல என்று முணு முனுத்தாள்.
தம்பி நீங்க நல்லாத்தான் ஓட்டியரப்போவீக ஆனால் முன்னால வாரவன் எப்படி வருவான்னு யாருக்கு தெரியும். இன்னைக்கு கவர்மெண்ட் பேயிக்கும் பிசாசுக்கும் லைசென்ஸ் கொடுக்குது இந்த வயசான காலத்துல உயிர கையில பிடுச்சுக்கிட்டு போக வேண்டியா இருக்கு என்று பக்கத்தில் உள்ள பாட்டி சொல்லியது.
சவாரியை இறக்கி விட்ட உடன் சாரதிக்கு போன் பறந்தது. சாரோ ஜான்சனோட பறம்புக்கு போனால் எந்த இடஞ்சலும் வராது போவோமா என்று ஆட்டோவை விரட்ட ஆரம்பித்தான் குமாரு.
சரி அப்படினா நாங்க ஸ்டேட் பேங்க் ஸ்டாப்புல நிக்கிறோம் சீக்கிரம் வா என்று துண்டித்தான் சாரதி.
இதை கேட்ட ஜானுக்கு வயித்துல புளியை கரைத்தது, எங்க பறம்புக்கா எங்கய்யா எந்த காட்டுல நிக்குறாருனு தெரியலையே, என்று பதறிப் போய் வீட்டுக்கு போன் போட்டு கேட்டான். பருத்திக்கு மருந்து வாங்க போய்ட்டார்னு உறுதி படுத்தி விட்டு அரை மனதுடன் ஒப்புக் கொண்டான்.
ஏய்! ஆந்தா பாரு குமாரு ஆட்டோ வருது என்றவாறு நமக்கு கையாளு சரியில்லனா கையும் ஓடாது காலும் ஓடாது என்று ஆட்டோவுக்கு கையை காண்பித்N;தன்.
குமாரு வெயிலு மண்டைய பொழக்குது ட்ராபிக் போலீஸ் இப்ப நிப்பானுக சிக்கிட்டமுனா கொப்பு கொப்பா ஆட்டுவானுக பயத்துலயே போகனும் பிறகு என்னதான் சரக்கு அடுச்சாலும் ஏறாது அதனால குறுக்கு பாதையில போனா நல்லது என்றேன்.
வேர்த்து விறுவிறுத்து சட்டை நனைந்த நசநசப்பில் வண்டியில் ஏறியதும் கெட்ட ஜோலிகள் நடக்கும் நாக்குடி கண்மாயை கடந்து சுண்ணாம்பு காலவாசலை நெருங்கியதும் இரண்டு பக்கமும் அடர்ந்த மரங்கள் குளிர்ச்சியை தந்தது. கொஞ்ச தூரம் தான் என்றான் ஜான். ஒரு ஆளின் இடுப்பு உயரத்திற்கு வளர்ந்து காய்ந்து போன காட்டுப் புல்லு பயங்கரமா பயமுருத்தியது. எந்த திசையில் திரும்பி பார்த்தாலும் பதமான இளம் மஞ்சள் கலரில் நெளிந்து நெளிந்து தென்றலில் அசைந்தாடிய புல் மனதை மயக்கியது. இந்த இடம் மட்டும் டைரக்டர் சங்கருக்கு தெரிந்திருந்தால் சீனாவுக்கு போயிருக்க மாட்டார் என்று ஜான்சன் பேசிக்கொண்டே வந்தான்.
குமாருக்கு ஸ்கூல் சவாரிக்கு நேரம் ஆகிக் கொண்டு இருந்ததால் வண்டித்தடம் தெரியும் வரை போய் விட்டுட்டு திரும்பிட்டான். மகேசும் சாரதியும் முன்னால் நடக்க, பின்னால் கார்த்திக்கும் மாரிமுத்துவும் காலுக்கு கீழே பூச்சி கொட்ட கிடந்தாலும் கிடக்கும் பார்த்து நடங்க என்று எச்சரிக்கை செய்தவாறு நடந்தோம்.
நடக்கும் ஓசை கருக் மொருக் என்றும் மணலில் நடக்கும் போது வலுக்கலும் சேர்ந்து இனிமையான இசையாக கேட்டது.
ஒரு வழியாக மணலும் பொட்டலுமாக இருந்த இடத்தில் கல்லு குத்தாத விதமாக மணலை கூட்டி தனி தனியாக உட்கார்ந்தோம். கொண்டு போனதை படையல் போல விரித்து குல தெய்வத்தை வேண்டுவதைப் போல் வேண்டி கொண்டோம். சூரியனின் பட்டொளி கதிர்கள் மரச்செடி கொடிகளின் பின்னலின் இடையான காட்சியாக தெரிந்தது.
ஆள் அரவமற்ற இடத்தில் யாரும் பார்த்து விடக் கூடாது என்று பேசிக் கொண்டே கிளாசில் சரக்கும் தண்ணியும் சரிசமமாக கலக்கும் போதே எனக்கு தண்ணி வேண்டாம் சோடா தான் வேண்டும் என்று குடிப்பது கூலாக இருந்தாலும் கொப்பளிப்பது பன்னிரில் என்று பேசும் ஜான’சன் அதிகாரத்துடன் கேட்டான். பின் வனகாத்து கறுப்புகளுக்கும் மண்ணுக்கும் மூன்று முறை தெளித்துவிட்டு கண்சிமிட்டி புன்னகையுடன் எடுத்து சியர்ஸ் கூட சொல்லவில்லை காஞ்சமாடு கம்பை மேய்வதை போல் ஒரே மூச்சாக கண்ணை மூடிக் கொண்டு உருஞ்சி விட்டோம் வாய் ஒழுக சட்டையில் வடித்துக் கொண்டும் வாயை நெளித்துக் கொண்டும் தூ, தூ என்று துப்பிக் கொண்டோம்.
அப்போது கிரிச் கிரிச் நறுக் மொறுக் என்று சத்தம் கேட்க திடுக்கிட்டோம். யாருமே எதிர் பார்க்கவில்லை கருத்த உடம்பு கையில் கம்பு தோலில் தொங்கிய தண்ணிக்கேன், மற்றொரு கையில் தூக்குவாளி எண்ணை வடிந்த முகத்துடன் கோபமாக முறைத்துக் கொண்டு நின்றார் ஆட்டுக்காரர். எல்லோருக்குமே பயத்தில் தலை லேசா கிறுகிறுத்தது.
சாரதி மெதுவாக பேச்சைக் கொடுத்து இது எங்க இடந்தான், சும்மா! ஜாலியாக! என்னைக்காவது ஒரு நாள் சாப்பிடுவோம் உங்களுக்கு என்று கேட்டு முடிக்கல,
புள்ளய பெத்து கருமாயப்பட்டு வளர்ப்போம் நீங்க என்னடானா குடியும் கும்மாளமுமா சீரளிஞ்சு போய்க்கிட்டு இருக்கீங்க என் வீட்டுலயும் ஒரு அருதளிய வளர்த்து வாழிபமாக்கினா அவன் குடிச்சிட்டு வெட்டவாரான். ஒரு நாள் தீமட்டி குழலைவைச்சு அடிச்ச அடில ஆறு தையல் போட்டு பொளச்சதே மறு பொழப்பா போச்சு, என்ன! செய்ய இப்ப உள்ள பயக எதுக்கும் மரியாதை கொடுக்க மாட்டானுக படித்து கவர்மெண்ட் வேலைக்குப் போய் பெத்தவங்களுக்கு கடைசி காலத்துல நல்லகஞ்சி கொடுத்து எடுத்து பொதைக்கனுமே என்ற அக்கறை இல்லாமல் அப்பனோட ரத்தத்தை உருஞ்சு உடலை வளர்த்து பணம் சம்பாதிக்காமல், பிள்ளை குட்டி இல்லாமல் நாளைக்கு பொண்டாட்டி கையால் வெளக்கு மாத்தால அடிவாங்கும் போதுதாம்ல எங்க அருமை தெரியும் என்று அந்த ஆட்டுக்காரர் விருவிருவென்று தன் நெத்தியில் அடித்துக் கொண்டு நடந்துவிட்டார்.
வாங்கிட்டுப் போன கடலைமிட்டாயும் சேவும் பற்களில் அறைபட மப்பு தலைக்கேரி உளர ஆரம்பித்தான் மாரிமுத்து. அவ அவன் கூட போனாள் இவ இவன் கூடபோனாள் அந்த கீழத்தெரு குந்தானி பார்க்கிற பார்வையே சரியில்லை என்று உள் ரகசியத்தை கக்கினான்.
ஏய்! நிறுத்து இன்னைக்கு உள்ள பொடிப் பயக குஞ்சுல முடிகூட மொழைக்கல ஒவ்வொருத்தனும் அவ அவன் ஆத்தாலையும் அப்பனையும் ஏமாத்தி செல்லு வாங்கி அமனக்குண்டி படத்தப் பார்த்துக்கிட்டு அழையுதானுக, வயசு வித்தியாசம் இல்லாம பொம்பளைகள ரசிக்கிறானுக, இதுக்கு நாம பரவாயில்ல என்ன மாப்பு நான் சொல்லது என்று கார்த்திக் வானீர் வடித்தான்.
இப்படியாக ஒவ்வொருவரும் மனசுல உள்ளத கொட்டிக் கொண்டு இருக்கும் போது மாரிமுத்து எடுத்தான் வாந்தி, ரவுண்டு ரவுண்டா, நேத்து சாப்பிட்டதும் வெளியே வந்தது. உட்கார்ந்திருந்தவன் அப்படியே சொலக்குனு விழுந்து விட்டான் அவன் கண்ணுரெண்டும் மேலாக்க ஏறிவிட்டது. சுய நினைவு பாதியாகவே இருக்க இருட்டாகிவிட்டது.
ஆட்டோவில் விட்டுட்டுப்போன குமாரு போன் போட்டு அண்ணே, எத்தனை மணிக்கு வரனும் வேற ஆப்பரு இருக்கு லேட்டாகுமானு கேட்டான். அதுக்கு, இந்த மாரிமுத்து தாயோலி வாந்தி எடுத்து சுருண்டு போய் கிடக்கான் குமாரு, அவனால நடக்க முடியாது அதனால லேட்டா வந்தா நல்லது என்று மப்புல போனை பாக்கெட்டில் வைக்க முயற்சித்து வாந்தியில் போட்டுவிட்டான்.
மாரிமுத்துவுக்கு கொஞ்ச நாளா வயித்து வலி அல்சருனு சொல்லி மெடிக்கலில் மாத்திரை வாங்கி போட்டதனால் வயிறு புண்ணாகிவிட்டது. அதனால் வாந்தி எடுக்கும்போது அசடு அசடா ரத்தமும் சேர்ந்து வந்தது. மூன்று மணி நேரமாகியும் போதை குறையவில்லை. ஏன்னா! காலையில் இருந்தே பட்டினியாக இருந்திருக்கான் கேனப்பய, யாருமற்ற இருட்டு பயமுறுத்தியது. காட்டுப் பூச்சிகளின் ரீங்காரமும் மின்மினிப் பூச்சிகளின் ஒளியும் அந்த பேரமைதியும் அண்டவெளி நட்சத்திர கூட்டத்தில் மிதப்பதை போல் இருந்தது.
கார்த்திக்கும் மகேசும் மாரிமுத்துவை தூக்கி நடக்க வைக்க எவ்வளவோ முயன்றும் தோற்றுப்போய் ரோட்டுப் பாதை வரை கொண்டு வர சிரமப்பட்டோம். மாரியின் உடம்பிலுள்ள இரத்தமும் சளியும் கார்த்திக்கின் சட்டையிலும் மகேஸின் உடம்பிலும் ஆகிவிட்டது.
குமாரு வேற ஆட்டோவுக்கு சொல்லாமல் லேட்டாகவே வந்து சேர்ந்தான். பாதி தூரம் மாரியை தூக்கி கொண்டு வருவதை பார்த்ததும் ஓடியாந்து குண்டு கட்டாக தூக்கிகிட்டு செல் டார்ச் லைட் அடிக்க வெளிச்சத்தில் ஆட்டோவை பார்த்து தள்ளாடியபடி கும்மிருட்டுலேயும் நடந்தோம்.
டிக்கியில் படுக்க வைத்தும் ரத்த வாந்தி நிற்கவில்லை. இது மனதை ரணமாக்கியது. சாரதி எப்போதோ ஏற்ப்பட்ட தன் கால் முறிவால் தூக்கமுடியாமல் போனதை வருத்தத்துடன் சொல்லி சங்கடப்பட்டான்.
இவ்வளவு நடந்தும் மையிரே போச்சுனு கையில் பிடித்துக் கொண்டு பேச்சுக்குச்கூட ஒத்தாசை பண்ணாமல் சட்டை பேண்டில் வாந்தி பட்டுவிடுமோ என தன் இறக்க மற்ற குணத்தை வெளிப்படுத்தினான் ஜான்.
இரவு ஒன்பது மணி ஆயிருச்சு இந்த செத்த பய எங்க போயி ஊர் மேயிதோ இன்னும் ஆளயுங்கானும் தேழையும் கானும் அவன் அப்பனுக்கு புள்ள தப்பாம இப்பமே “அவன்” புத்திய கையில எடுத்திட்டானே, இந்த கிழட்டு பெயல நம்பிவந்து இத்தனை வருசத்துல அடி வாங்கி, சண்ட சச்சரவோட சீரளிஞ்சு என் காலம் போயிருச்சு, என் வயித்துல பொறந்த புள்ளையும் இப்படியா, குடும்பமே பொழப்பத்த பய குடும்பமா ஆயிபோச்சே, இவன நம்பி எவள கட்டி வைக்க, அப்படியே வச்சாளும் என்ன மாதிரியே அவளும் வந்து சீரளிவாளே,
ஒரு பொண்ணு புள்ளையோட வாழ்க்கைய கெடுத்தது போல ஆயிருமே, அந்த பாவத்த வேற நான் சுமக்கனுமே ஆண்டவா, அதுக்கு முன்னால எடுத்துக்க. என் கண்ணு மறஞ்சாத்தான் என் அருமை இந்த பாவிபயகலுக்கு தெரியும்னு தனியா அந்த வெளக்கு நாச்சியாக்கிட்ட பேசிக்கிட்டு இருந்தாலும் இருப்பா என் அம்மா என்று சொல்லி கண்ணீரை துடைத்தக் கொண்டான் சாரதி.
ஆட்டோ வேகமாக ஊருக்குள் வந்தா இருந்தது. என்னை வாத்தியார் வீட்டுல போயி விடுங்க என்று பல முறை முனங்கிக்கொண்டு கிடந்தான் மாரிமுத்து. கார்த்திக்கும், மகேசும், ஜானும் ஏறிய இடத்திலேயே இறங்கினோம். வேறு எங்கேயும் விட்டு விட்டு நம் வேலை முடிந்தது என்று போக முடியாமல் குமாரும் சாரதியும் தலையை பிச்சுக் கொண்டு பத்து மணி வரை காத்திருந்தார்கள்.
கடைசியாக என்ன ஆனாலும் பராவாயில்லை ஆனது ஆகட்டும் மாரிமுத்துவை அவன் அக்கா வீட்டில் விட்டால் பார்த்துக்கொள்வாள் என்று வீட்டுக்கு வழி சொல்லி தெரு முனையிலேயே இறங்கிக் கொண்ட சாரதி, பேசி வைத்துக் கொண்டதைப்போல் வீட்டு வாசலில் ஆட்டோ நின்றதும் ஒன்றும் தெரியாதது போல் ஓடிப்போய் குமாரும் சாரதியும் மாரிமுத்துவை இறக்கி படியில் உட்கார வைத்து, யோக்கியனைப் போல் வஞ்சு சமாதானம் சொல்லி விட்டுட்டு வந்தார்கள்.
இவ்வளவும் நடந்துவிட்டது. ஏனக்கு உறக்கம் வரவில்லை, நெஞ்ச அடித்துக்கொள்கிறது. ரத்த வாந்தி கண்ணுக்கு முன்னால் உமட்டுகிறது. ஆட்டோவில் வரும் போது பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜான்சன் காதில் ஒரு ரகசியம் சொன்னான. அதை கேட்டதும் என் நிம்மதியே போச்சு.
ஏய்! மாரிமுத்துவுக்கு அவங்க குடும்ப பரம்பரையில் உள்ள தொற்று நோய் உள்ளது. அது எனக்கு முன்னாலேயே தெரியும் அதனாலதான் என்று அவன் சொன்ன சொல் மூன்றாம் ஜாமம் வரை முயற்சித்தும் தூக்கம் வரவில்லை. நாளை நமக்கும் எதுவேனாலும் நடக்கும்… என்று படுத்தே கிடந்தேன் விடியும் வரை.

-கபிலன் சசிகுமார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here