கருணை கோடு…

0
39

கந்தலாடை உடுத்தினாலும்
கருணையில் நாங்கள்
கர்ண பரம்பரை தான்…
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்தாலும்
கருணைக் கோட்டிற்கு மேல்தான்
வாழ்கிறோம்…
காக்கை குருவி எங்கள் சாதி
(ஏழை சாதி)
கருணையே எங்களது நீதி…
என்ன செய்வது
இல்லாதோரிடம் இருந்தே பழகிவிட்டது
இந்த கருணை….

-சசிகலா திருமால்
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here