கனா கண்டேன்…

0
19

கனா கண்டேன்…

உன்னை பற்றிய எண்ண அலைகள்
இதயச் சுவற்றை மோத
உன் நினைவுகளோ
இதயமதில் தடம் பதிக்க..
மெல்லிய ரொமான்டிக்
பியானோ மியூசிக் ஒன்று
பேக்ரவுண்டில் இழையோட…

அடடா…
உந்தன் நினைவுகளும் சுகமாக மாற
ஏதோவொன்றை எதிர்பார்த்து
மனமது கிறங்கிட
இதயமோ
உன்பெயர் சொல்லியே உச்சரிக்க
காதல் மயக்கத்தில்
உன்னோடான கிறக்கத்தில்
உள்ளமது தடுமாற….

இதயத்தின் ஓசைகள்
லப்டப் இசை மறந்து
தாறுமாறாய்
சங்கீத ஸ்வரங்களை இசைக்க
என்னவோ மயக்கம் என்னுள்…
உன்மீதுக் கொண்ட
மயக்கத்திற்கும் கிறக்கத்திற்கும்
அகராதியில் காதலென்று பெயராம்…
ஆமாவா மாமா…

பட்டாம்பூச்சியின் சிறகொன்றை
கடனாய் வாங்கி கண்கள் படபடக்க
இதயமோ குறுகுறுக்க…
உந்தன் கொஞ்சிடும் பார்வைகளில்
விரக தாபமொன்று
நெஞ்சினில் ஊற்றெடுக்க…
உனை நினைத்தே கனா காண்கிறேனடா..
கருப்பழகா…

-சசிகலா திருமால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here