கண்ணீர் கரை அல்ல! இரத்த உயிர்கரை!

0
108

கண்ணீருக்கு சொந்தமான கண்கள்தான் !ஆனால்
கண்ணீருக்குள் இரத்தம் வழிய தாங்குமா இதயம்!!

வயிற்றைகழுவ தண்ணீர்போதாதே!!
வயிற்றை நிறைக்க உணவுவேண்டுமே?!

உழைப்புக்கு போனால்!
உயிர்போகுமென்றுதெறிந்தும், தெரியலையே!!

பட்டாசு, கல்யாணத்திற்கு போடகொடுத்தோம்!
எங்கள்கருமாதிக்கு இன்றைக்குஆனதே!!

அச்சங்குளமே! (சாத்தூர் அருகே!) அஞ்சவைக்கு பட்டாசுவிபத்தே!

உயிரைபறிகொடுத்தோம்! தீக்கிறையானோம்!
அரசே நடவடிக்கை எடு!!

அஞ்சாமல்பட்டாசுதொழிலை அலட்சிமாய் பார்த முதலாளிகளே!!
அனுமதிவழங்கிய‌ அரசு அதிகாரிகளே!!

நியாய விசாரணைகொடு!!
இழப்பீடு தொகையை ஏற்று!!

கண்ணீர் கரை அல்ல! இரத்த உயிர்கரை!

-கவிதை மாணிக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here