கண்ணதாசனே! தமிழர் வாழ்வின்
எண்ணதாசனே! கிருஷ்ணநேசனே!
சிறுகூடல்பட்டியில் பிறந்தவனே!
சிகாகோவில் மறைந்தவனே!
உலக வாழ்வை பாடலில்எழுதியவனே!
உலகத் தமிழர் மனதில் வாழ்பவனே!
பிறப்பு இறப்பு இறைவனுக்கு மட்டுமல்ல
பிறந்து வாழ்ந்த கவிஞனுக்கும் இல்லை!
தாலாட்டு முதல் ஒப்பாரி வரை உன்னிடம்
தவழ்ந்து மடி தாவும் தமிழ் ஆகுமே
வார்த்தைகளில்வாழ்வைசொன்னவனே!
அர்த்தமுள்ள இந்துமதம் தந்தவனே!
வாழ்ந்து காட்டியவனே! வாழ்வைப்
பிழிந்து ஊட்டியவனே!
இசைப் பாடல்கள் வழியே மனித
ஆசையையும் துன்பத்தையும்
வசைபாடி மொழிந்தவனே!
உன் நினைவுநாள் காலண்டர் சொல்லும்
உன் நினைவாலே என்காலம் செல்லும்!
-சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி