கணவன் மனைவிக்காய்… !

0
51

கணவன் மனைவிக்காய்!

கணவன் மனைவி க்குள்ளே!!
காற்றுக்கும் கேளா! ஊடல் வேண்டும்!!
விட்டுக் கொடுப்பதால் கெட்டுப் போவதில்லை!!
விட்டுப்பிரியா கொடுப்பணை! உறவாய் இருக்கபிரிவில்லை!!

நல்கணவன் கிடைப்பது! மனைவியின் வரம்!!
நல்மனைவி கிடைப்பது! கணவனின் தவம்!!
கணவன் மனைவியை தன்வசப்படுத்துவதும்!
அதிகாரத்தின் பலமென்றால் தோற்கும்!!
அன்பு கரமென்றால் ஜெயிக்கும்!!
கணவனை புரிந்தமனைவியும்!
மனைவியை புரிந்தகணவனும்!!
காளைவண்டி சக்கரம்போன்றது!!

உன் மீது கோபம் கொள்ளும் கணவனே!!
உன்மீது அதிகம் பாசம் காட்டும்உயிர் நண்பனே!!
உன்னை மட்டும் நேசிக்கத் தெறிந்தவன்!
உன்னிடம் தானே! செல்லச்சண்டை செய்யமுடியும்!!

எங்கும் !தன்னை மாற்றிக் கொள்பவள் மனைவியாக இருக்க!!
என்றென்றும் இல் வாழ்க்கை சிறக்க!!
அன்பைவிட்டுக் கொடுப்போம்!! _(சிலதை)
அணுபொழுதும் விலகாதிருப்போம்!

– கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here