ஒற்றை மர தோப்பு…

0
22

ஒற்றை மரம் தனை
தோப்பென்று எண்ணியே
புத்தனவன் தவமிருக்க…
புத்தனின் ஞான ஒளியில்
ஞானம் பெற தவமிருக்கிறது
இவ்ஞாலம்…

ஆம்…
ஆசையை துறந்திடவே
பேராசைக் கொண்டு
தவமிருக்க துணிந்தவனின்
பேராசையை மட்டுமே பெற்று
துடித்தியங்குகிறது இப்பூலோகம்..

-சசிகலா திருமால்
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here