ஒரு குரல் என்ன செய்யும்?..

0
24

ஒரு குரல் உள்ளுக்குள் நுழைந்து
மெதுமெதுவாய் உயிர் குலைக்கும்..
செவிவழி நுழைந்து
இதயத்தில் இடியென இறங்கும்..
ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை
ஆனந்தமாய் ஆழ்மனதில் பாய்ச்சும்..
உயிரணுக்களில் ஊடுருவி
அணுப்பிளவு ஆராய்ச்சியொன்றை
செவ்வனேச் செய்து முடிக்கும்…

ஒரு சமயம் உயிர்ப் பூவை உயிர்க்கச் செய்யும்
மறு சமயம் காம்போடுக் கருகச் செய்யும்…
ஆழ்மனதின் ரகசியங்களை
தோண்டியெடுத்துத்
தொல்லை செய்து தொலைத்தெடுக்கும்…
அமிலம் எனும் ஆயுதம் வீசி
நிம்மதியை நிர்கதியாக்கும்…
ஓர் குரல் வேறென்ன
செய்துவிட முடியும் பெரிதாய்?..

-சசிகலா திருமால்
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here