ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கு விறபனையாகும் மியாசாகி மாம்பழம்.

0
15

இந்தியாவில் விளையும் அரியவகை மாம்பழம்..!
பழங்களின் ராஜா என அழைக்கப்படும் மாம்பழம், இந்தியாவில் எண்ணற்ற வகைகளில் உள்ளது. குமரி முனையில் இருந்து காஷ்மீர் வரையில் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது 2 வகை மாம்பழங்கள் உள்ளது. ஆனால் அத்தனை மாம்பழங்களையும் ஓரம்கட்டியுள்ளது ஜப்பான் நாட்டின் மியாசாகி மாம்பழம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த மாம்பழம் தற்போது இந்தியாவில் வளர்கிறது என்பது தான்.

இப்படி இந்த மாம்பழத்தில் என்ன சிறப்பு ?
ஜப்பான் மியாசாகி மாம்பழம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மாம்பழம் என்றால் அது ஜப்பான் நாட்டின் மியாசாகி மாம்பழம் தான். ஜப்பான் நாட்டின் குட்டி நகரமாக மியாசாகி-யில் வளரும் இந்த மாம்பழம் ஒன்று 350 கிராம் எடையும், 15 சதவீதம் அதிக இனிப்பாகவும் இருக்கும்.

மியாசாகி மாம்பழத்தின் நிறம்

அனைத்திற்கும் மேலாக இந்த மாம்பழம் மஞ்சளாகவோ, சிவப்பாகவோ, பச்சையாகவோ இருக்காது. மொத்த மாம்பழம் பிளேமிங் ரெட் என்ற நிறத்திலும், டைனோசர் முட்டை வடிவிலும் இருக்கும். இதுதான் இந்த மியாசாகி மாம்பழத்தின் தனிச் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

மியாசாகி மாம்பழத்தின் விலை

மியாசாகி மாம்பழத்தின் நிறம், வடிவம் ஆகியவை வித்தியாசமாகவும், எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவும் இருக்கும் காரணத்தால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மியாசாகி மாம்பழத்தின் கட்டுப்பாடுகள் மியாசாகி மாம்பழம் முழுமையான தரம், நிறம் ஆகியவை அடையச் சூரிய ஒளி அதிக நேரமும், சரியான தட்பவெப்ப நிலையும், அதிகப்படியான மழையும் தேவை. இது மட்டும் அல்லாமல் மியாசாகி மாம்பழம் முழுவதும் ஒரே நிறம் அடைவதற்கு ஒவ்வொரு மாம்பழத்திற்குத் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு வலை போட வேண்டும்.

3 லட்சம் ரூபாய் விலை

தற்போது சந்தைக்கு வந்துள்ள மியாசாகி மாம்பழம் அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 மாம்பழம் அடங்கிய ஒரு பெட்டி 8,600 ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் அரியவகை மாம்பழமான மியாசாகி வகையை வளர்த்து அதிக லாபத்தை பெற்று வரும் தம்பதி ஒரு மாம்பழத்தின் விலை ரூ.21,000.
மத்திய பிரதேசம் ஜபால்பூர் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் சங்கல்ப் பரிஹாஸ் மற்றும் ராணி.

இவர்கள் இருவரும் ஒருமுறை சென்னை வந்துள்ளனர். அப்போது ஒருவர் அரியவகை மா மரக்கன்றுகளை இவர்களுக்கு கொடுத்துள்ளார்.

இவர்களும் சாதாரண மா மரக்கன்றுகளை போன்று இவர்களது தோட்டத்தில் வைத்து வளர்த்துள்ளனர். இது பெரிய மரமாகி பழங்கள் வைக்கும் போதுதான் இதன் அதியசயத்தை அறிந்துள்ளனர்.

இந்த மாம்பழம் சாதாரண மாம்பழங்களை போன்று மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இல்லாமல் சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது.
பிறகு இந்த மாம்பழத்தை குறித்த செய்திகளை தேட ஆரம்பித்துள்ளனர். இதன் பின்னரே இவர்களுக்கு இந்த மாம்பழத்தின் அதிசயம் தெரிய வந்துள்ளது.

ரூபி சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த மாம்பழம் ஜப்பான் நாட்டில் மியாசாகி என்ற இடத்தில் இது முதன் முதலாக பயிரிடப்பட்டுள்ளது.

மேலும், இது மருத்துவகுணங்கள் நிறைந்திருப்பதால் இதற்கு சர்வதேச பழங்கள் சந்தையில் அதிக விலை போகும் மாம்பழம் என்று தெரிந்துகொண்டுள்ளனர்.

கடந்த வருடம் இந்த மாம்பழத்தை ஒரு கிலோ ரூ.2.70 லட்சத்திற்கு விற்றுள்ளனர்.

கடந்த வருடம் இந்த அரிய மாம்பழத்தின் செய்திகளை அறிந்து சில திருடர்கள் மாம்பழத்தை திருடி சென்றுள்ளனர்.
அதனால் இந்த வருடம் 4 காவல்காரர்கள், 6 நாய்கள் என்ற பாதுகாப்புடன் இந்த மாம்பழங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு மாம்பழத்தின் விலை ரூ.21,000 என்றும் தெரிவித்துள்ளனர்.

இதில், பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது.

இது பார்வை குறைபாடுகளை சரிசெய்வதில் வல்லமை பெற்றது.

இதன் அபூர்வத்தை தெரிந்து கொண்ட இவர்கள் இதனை மேலும் அதிகரிக்க இருப்பதாக தோட்டத்தின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here