ஏன்? எதற்கு? இன்சூரன்ஸ்? பகுதி – 04 

2
400

அழகான கோபுரங்களில் கொலுவீற்றிருந்த குடும்பங்கள் பல
ஒரே நாளில் குப்பைமேட்டுக்கு வீசி எரியப்பட்டுவிடும் அவலத்திற்கு என்னதான் காரணமாக இருக்கமுடியும்?
அது அவர்கள் விதி என்று ஒரு பெயரை வைத்துவிட்டு தப்பித்துகொள்ளலாமா?
அல்லது காரணங்களை ஆராய்ந்து அதற்கு உண்மையான ஒரு பெயர் வைக்கலாமா?
அப்படி ஆராய்ந்து அதற்கு ஒரு பெயர் வைப்பதென்றால் அதன் பெயர்
கடந்து போதல்
அதாவது இது எனது பிரச்சனை இல்லை. இது வேற யாரோ பிரச்சனை என கடந்து போய்விடுதல்.

எப்போதுமே பிரச்சனைக்கு விடைகளை தேடுவதை விட.. கடந்து போதல் என்பது எல்லோருக்குமே வசதியான ஒன்று.

விஜய் குடும்பம் நிலைகுலைந்து போனதை பற்றி கட்டுரையில் படித்தவர்கள் அது யாரோ பாவம் விஜய்னு ஒரு பையனோட குடும்பத்தினர் கதை என்று கட்டுரை முடிந்தவுடன் கடந்து போய் விடுவதும்..

கண்ணால் பார்த்தவர்கள் அடடா நமது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இப்படி நேர்ந்து விட்டதே என்று பரிதாபம் காட்டிவிட்டு கடந்து போய்விடுவதும்,
நமக்கு தெரிந்த ஒரு குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டது என்று யாரிடமாவது சொல்லி ஆதங்கப்பட்டு விட்டு கடந்து போவதும் தான்.

ஆனால் அவர்கள் வீழ்ச்சியில் நமக்கும் ஒரு எச்சரிக்கை கொடுக்கப்படிருக்கிறது என்றும்,
அந்த குடும்பத்தின் மூலமாக நமக்கும் மறைமுகமாக ஒரு செய்தி உணர்த்தப்படிருக்கிறது என்றும் யாருமே யோசித்துப் பார்ப்பதற்கு கூட முயல்வதில்லை.

ஏனென்றால் நமது உடம்பு இரும்பால் செய்யப்பட்டு
நமது உயிர் ஏழு கடல்கள் தாண்டி,
ஏழு மலைகள் தாண்டி ஒரு குகைக்குள் பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருக்கிறது என்கின்ற நம்பிக்கை.

கண்ணுக்கே தெரியாத ஒரு வைரஸ் தான் இன்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. மலைகளையே வேரோடு பெயர்த்து எரிந்து கொண்டிருக்கிறது.

நமக்கு நடக்கும் வரையில் எல்லாமே வேடிக்கைதான் என்பார் புத்தர்.!

இரவில் உறங்கப் போகின்றவர்களில்.. நான்கு சதவீதம் பேர் காலையில் விழித்து எழுவதே இல்லை. நிரந்தரமாக உறங்க போய்விடுகிறார்கள் என்பது மரணங்களை பற்றிய ஒரு புள்ளி விபரம்.

காலையில் பொருள்தேடி வீட்டைவிட்டு வெளியே சென்ற எல்லோருமே பத்திரமாக வீடு வந்து சேர்ந்து விடுவதில்லை. யாரோ சில பேர் திரும்பி வராமலே போய் விடுகிறார்கள். இன்று அந்த சில பேரில் நாம் இல்லை.
நாம் இன்று பத்திரமாக நம் அன்புக்குரியவர்களோடு வாழ்வதற்கு வந்து சேர்ந்து விட்டோம்.

சிலபேர் இதனை பெருமையாக சொல்லி கேட்டிருப்பீர்கள். “நூலிழையில் தப்பிச்சேன். இன்னும்.. ஒரு செகண்ட்தாம்பா கதையே முடிந்திருக்கும். என்றெல்லாம் பெருமையாக பேசி கேட்டிருக்கிறோம்.
அது பெருமையா?
இல்லவே இல்லை. உங்கள் கடமைகள் ஏதாவது இருந்தால் விரைந்து முடித்து கொள்வதற்கு உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.

“போடா என்ன அவசரம். போய் உன்னை நம்பி இருப்பவர்களுக்கு எதையாவது செய்துவிட்டு பிறகு வா என்று சில பேருக்கு கடவுள் முதுகில் ஒரு தட்டு தட்டி மீண்டும் ஒரு வாய்ப்பு
கொடுத்து அனுப்பி வைத்தது போல.
ஆனால் எல்லோருக்குமே இந்த வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை.

மற்றவர்கள்
வாழ்க்கையில் நடந்ததை பார்த்து பாடம் கற்றுக்கொள்ள நாம் முன்வந்தோம் என்றால்.. நிச்சயமாக பெரிய இழப்புகளை நாமும், நம்மளையே நம்பியிருக்கும் நம் குடும்பத்தினரும் சந்திக்கும் நிலைமை வராது.
ஆனால் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்கிற அலட்சியம் தான் சிலர் வாழ்க்கையில் சரிசெய்துவிட முடியாத இழப்புகளுக்கும், பரிதாப நிலைமைக்கும் காரணமாய் அமைந்துவிடுகிறது.

எத்தனை, எத்தனை விபத்துகளை கண்ணால் பார்க்கிறோம், கேட்கிறோம், செய்தியாகப் படிக்கிறோம்,
ஆனால் அவர்கள் எல்லாம் எதோ ஒரு வீட்டிலிருந்து மனைவி குழந்தைகளுக்கு டாட்டா காட்டிவிட்டு குழந்தைகள் வாங்கிவரச் சொன்ன தின்பண்டங்களை மனதில் குறித்துக்கொண்டு, மாலையில் வேலை முடிந்து சீக்கிரம் வந்து விடுவேன். என்று நம்பிக்கையாய் சொல்லி விட்டு, எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய கனவுகளையும் சுமந்து கொண்டு போனவர்கள் தானே?
திரும்பவும் மனைவி குழந்தைகளோடு வந்து சேரவே இல்லையே? இனி எப்போதுமே அவர்கள் வரப்போவதில்லை ஆனால் அவர்களுக்காக வீட்டில் காத்திருப்போரின் நிலைமை?

கூட்டில் வாழும் பறவையின் குஞ்சுகளில் பத்தில் இரண்டு கூட்டின் குஞ்சுகள் பசியிலேயே இறந்து போய் விடுகின்றனவாம். காரணம் இரை தேடி சென்ற தாய் பறவை கூட்டிற்கு திரும்பவும் வராமல் போய் விடுவதினால் என்கிறது. பறவைகளின் வாழ்வியலை பற்றிய ஒரு ஆய்வு.

ஒரு பறவை தன் கூட்டை விட்டு எத்தனை நூறு மைல்கள் இரை தேடி பறந்தாலும் சரியாக தன் கூட்டின் திசையை அறிந்து சரியான நேரத்திற்கு தன் குஞ்சுகளுக்கு உணவு எடுத்து வந்து விடும்.
அப்படி வரவில்லை என்றால்..
வழியில் வேறு ஏதாவது பெரிய பறவைகளால் இரையாக்கபட்டிருக்கலாம்.
அல்லது வேடுவர்களால் வேட்டையாட பட்டிருக்கலாம்.
ஆனால் தாய் இரை கொண்டு வந்துவிடும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் அதன் கூட்டின் குஞ்சுகளின் நிலைமை?

கூட்டில் காத்திருக்கும் பறவையின் குஞ்சுகளுக்கும் வீட்டில் காத்திருக்கும் நம் பிள்ளைகளுக்கும் என்ன வித்தியாசம்?

எங்களிடம் இன்சூரன்ஸ் எடுத்தவர்களுக்கு அவர்கள் வீட்டில் போய் இன்சூரன்ஸ் பத்திரத்தை கொடுக்கும் போது நாங்கள் கட்டாயம் அவர்களிடத்தில் கொடுக்கும் வாக்குறுதி என்னவென்றால்…
நீங்கள் வீட்டிற்குள் இருக்கும் வரையில் தான் இது பேப்பரில் அச்சடிக்கப்பட்ட ஒரு சாதாரண ஒரு எல் ஐ சி பத்திரம்.

ஆனால் நீங்கள் வீட்டிற்கு வெளியே கால் வைத்துவிட்டால் அதன்பிறகு இது வெறும் பத்திரம் அல்ல பணம்.
இதில் எத்தனை சைபர் போட்டு ரூபாய் மதிப்பு அச்சடிக்கப்படிருக்கிறதோ அத்தனை பணத்தையும் உங்கள் வீட்டு பீரோவிற்குள் உங்கள் அன்புகுறியவர்களுக்காக நீங்கள் வைத்துவிட்டு போகிறீர்கள் நம்புங்கள். என்போம்.

எங்கள் ஆபீஸ்ற்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்று ஒரு பெண் வந்தார். பாலிசி எடுப்பதற்காக அவர் கொடுத்த ஆதார் கார்டில் சிறிய திருத்தம் செய்ய வேண்டியதிருந்தது. அதை தாசில்தார் ஆபீஸ் சென்றால் அங்கு இருக்கும் இசேவை மைய்யத்தில் சரிசெய்து கொடுத்து விடுவார்கள் என்று கூறினோம்.
அதற்கு அந்தப் பெண் “தாசில்தார் ஆபிஸ் எங்கே அண்ணா இருக்கிறது” என்று கேட்டார்.
குமரன் ரோட்டில் இந்த இடத்தில் இருக்கிறது. என அடையாளம் சொல்ல முயன்றோம். அதற்கு அந்த பெண் “குமரன் ரோடு எங்கே அண்ணா இருக்கிறது” என்று திரும்ப கேட்டார். சரி குழப்பம் எதற்கு என்று..
நீங்கள் கலெக்டர் ஆபீஸ் போய்விடுங்கள் அங்கேயும் இசேவை மைய்யம் இருக்கிறது இதை அங்கேயும் சரி செய்து கொள்ளலாம் என்றோம்.
அதற்கும் அந்தப் பெண் “கலெக்டர் ஆஃபீஸ் எங்கே அண்ணா இருக்கிறது” என்று கேட்டார்.
நாங்கள் சந்தேகமாக நீங்கள் திருப்பூர் தானா?
அல்லது வெளியூரா? என்று கேட்டோம். அதற்கு அந்தப் பெண் “ஆம் அண்ணா திருப்பூர் தான்” என்றார் பிறகு எப்படி இதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் இருக்கிறீர்கள்? என்றோம்.
அதற்கு அந்தப் பெண் “என் கணவர் பழைய பஸ் நிலையம் தாண்டி என்னை எங்கேயும் வெளியில் அழைத்துச் சென்றதே இல்லை.
எது வேண்டுமென்றாலும் அவரே வாங்கி வந்துவிடுவார்” என்றார்.
சரி வெளியில் வேலைக்கெல்லாம் போய் வந்திருப்பீர்கள் தானே?
என்று கேட்டோம்.
“என் கணவர் இருக்கும் வரையில் என்னை வேலைக்கு போக அனுமதித்ததே இல்லை” என்றார்.
அவர் கணவர் ஒரு விபத்தில் இறந்து சில மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. இப்போது அந்த பெண் தனது பத்து வயது மகனை படிக்க வைத்துக்கொண்டு வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறார்.

பெருபாலும் நிறைய பேர் இப்படிதான் தன் குடும்பத்தின் பாரத்தை மொத்தமாக தூக்கி தன் தலையில் சுமந்துவிட்டு ஒரு நாள் பொத்தென்று வீதியில் போட்டுவிட்டு போய்விடுகிறார்கள்.
குடும்பத்தினர் கோபுரத்திலிருந்து குப்பை மேட்டுக்கு வீசப்படுகிறார்கள்.
திக்கு தெரியாத காட்டில் கண்களை கட்டி விட்டதை போல அவரை நம்பியிருந்தவர்கள் மிரண்டு போய் விடுகிறார்கள்.

பிள்ளைகளை நல்லா படிக்கவைக்கவேண்டும் என்று பார்த்து, பார்த்து நல்ல பள்ளியாக தேடும்போது..

நீ டாக்டர் ஆகப்போறியா?
கலெக்டர் ஆகப்போறியா?
என்று பிள்ளைகளிடம் ஆசையாக கேட்கும்போது..

எனக்கு கிடைக்காததெல்லாம் என் பிள்ளைகளுக்கு கிடைக்கனும்.
அவங்களை வாழ்க்கையில நான் ஓகோன்னு கொண்டு வரனும்.
என்று மற்றவர்களிடம் மிகப்பெரிய கனவுகளோடு பேசும்போது..
ஒரு கனமாவது யோசிக்காமலா இருந்திருப்போம்.
நாம் இல்லை என்றால் நம் பிள்ளைகளுக்கு இந்த கனவுகளையெல்லாம் யார் மீட்டு தருவார்கள் என்று..?
ஆனால் அதனை மனதில் வைத்து மாற்று ஏற்பாடுகள் ஏதாவது செய்து வைத்தோமா? என்றால்..
இல்லை
கடந்து போய் விடுகிறோம்.

இந்த மாதிரியான வாழ்க்கை முறைக்கு என்னதான் காரணம்? இப்படிப்பட்டவர்களுக்கு இதை யாருமே எடுத்துச் சொல்வது இல்லையா? இப்படி ஒரு விஷயம் நடக்கும் பட்சத்தில் விளைவுகள் என்ன மாதிரியாக இருக்கும் என்பதை புரிய வைக்க அவர்கள் பக்கத்தில் ஒருவர் கூட இல்லையா?
அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்களா?
அல்லது தவிர்க்கிறார்களா?

அல்லது எனக்குப் பிறகு என் குடும்பத்திற்கு என்ன நடந்தாலும் எனக்கு தெரியவா போகிறது என்ற அலட்சியமா?
இது பாவம் அல்லவா? அவர்கள் உங்களை நம்பி வந்தவர்கள் அல்லவா?

நீங்கள் அவர்களோடு இருந்தால் அவர்களுடைய கனவுகளையும், வாழ்க்கையையும் நிச்சயமாக அழகாக அமைத்துவிடலாம்.
ஆனால் நீங்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் வாழ்வில் இதெல்லாம் நடக்க வேண்டும் தானே.
அந்த சுய புரிதல் ஒன்று தானே இதற்கெல்லாம் தீர்வாக முடியும்.!

பொதுவாக தன் அடுத்த தலைமுறையை எப்படியாவது அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய்விடவேண்டும் என கனவு கான்பவர்களுக்கு..
மாற்று திட்டம் ஒன்றை செய்து வைப்பதின் அவசியம் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும்.
ஆனால் ஏன் பெரும்பாலானோர் அதை செய்வதில்லை.
அதற்கு என்ன காரணம்?
யார் காரணம்?
அடுத்த தொடரில் பார்போம்…தொடரும் …

– கூ, சுரேஷ்வரன்
  இன்சூரன்ஸ் ஆலோசகர்
   9787323994

2 COMMENTS

  1. தாய் பறவை மற்றும் குஞ்சுகள் உணவுக்காக காத்திருப்பு live ஆக கண்ணில் தெரிகிறது. இது இன்சுரன்ஸ் முக்கியத்துவம் பற்றிய நல்ல பதிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here