ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ்?
பகுதி-8

0
240

நண்பர்களே!
நாம், நம் குடும்பத்தினரோடு இருந்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கும்போது, அதில் எதையாவது குறைவாக செய்தாலோ, அல்லது அவர்களுக்கு தேவையான சில விஷயங்களை உடனடியாக செய்து கொடுக்க முடியாமல் போனாலோ, அது சம்பந்தமாக அவர்கள் பெரிதாக கவலை கொள்ள மாட்டார்கள். காரணம்! நாம் அவர்களுடன் தான் இருக்கிறோம்.
இன்று இல்லாவிட்டாலும் இனி வரும் நாட்களில் அதனை கட்டாயம் செய்து கொடுத்து விடுவோம், என்ற நம்பிக்கை அவர்களுக்கு நிச்சயமாக இருக்கும்.

ஆனால் அவர்களோடு நாம் இல்லாமல் போகும்போது, அவர்களுக்கு தேவையானது கிடைக்காமல் போனால், அந்த வருத்தம் அவர்களுக்கு பெரிய கவலையை கொடுத்துவிடும்.
அப்பா இருந்திருந்தால் இதை நமக்கு வாங்கி கொடுத்திருப்பாரே, இதெல்லாம் நமக்கு கிடைத்திருக்குமே, என்ற வருத்தமும், கவலையும், அவர்களை பெரியதொரு துயரத்திற்கு உள்ளாக்கிவிடும். (அது ஒரு சாக்லேட்டாக கூட இருக்கலாம்.)

இதனைத்தான் நாங்கள் இங்கே திரும்ப, திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதாவது! நாம் இருந்து நம் குடும்பத்தினருக்கு தேவையானதை செய்து கொடுத்தால், எப்படி நிறைவாக செய்து கொடுப்போமா, அதைவிட ஒருபடி மேலானதாக நாம் இல்லாவிட்டாலும், நம் குடும்பத்திற்கு கிடைக்கும் படியான ஒரு மாற்றுப் பொருளாதார ஏற்பாட்டினை செய்து வைத்துவிட வேண்டும்.
அது இன்சூரன்சாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்று கூட நான் சொல்லவில்லை. ஆனால் அப்படி ஒரு விசயத்தை செய்து வைப்பது, கட்டாயம் என்பதை மட்டும் தான் சொல்கிறேன்.

ஆம்! அப்படி ஒரு ஏற்பாட்டினை தான் சிவராமனும் செய்து வைத்திருந்தான். சிவராமன் தனது பெயரில் எடுத்திருந்த “ஐம்பது லட்சம்” டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசிக்கு இழப்பீட்டுத் தொகையாக “ஐம்பது லட்சங்களும்,”
மற்றும் இன்னுமொரு “பத்து லட்சம்” ரூபாய்க்கு எடுத்திருந்த எண்டோவ்மென்ட் பாலிசிக்கு முதல்கட்ட இழப்பீட்டுத் தொகையாக “பத்து லட்சங்களும்” சேர்த்து மொத்தம் “அறுபது லட்ச ரூபாய்கள்”, உடனடியாக சிவராமன் தனது வாரிசாக நியமித்திருந்த அவன் மனைவி நிர்மலாவிற்கு கிடைத்தது.
மேலும் “பத்து லட்ச ரூபாய்” என்டோவ்மெண்ட் திட்டத்திலிருந்து இருந்து “பத்து சதவீதம்” என்ற அடிப்படையில் வருடாவருடம் “ஒரு லட்சம் ரூபாய்” அடுத்து வரும் இருபது வருடங்களுக்கு தொடர்ந்து கொடுக்கப்படும், என்பதும் உறுதி செய்து கொடுக்கப்பட்டது. மேலும் அந்த பாலிசியின் முதிர்வுத் தொகையான “இருபத்தியோரு லட்ச ரூபாய்” தனது பிள்ளையின் இருபத்தியேழாவது வயதில் திருமண செலவிற்காக தேவைப்படும், என்று திட்டமிட்டு எடுத்திருந்ததால்,
அந்த “இருபத்தியோரு
லட்சம் ரூபாயும்” சிவராமன் பிள்ளையின் இருபத்தியேழாவது வயதில் கொடுக்கப்படும் என்பதையும் உறுதி செய்து கொடுக்கப்பட்டது. அதற்காக அடுத்த இருபது வருடங்களுக்கு செலுத்தப்படவேண்டிய பிரிமியம் தொகையையும், சிவராமனுக்கு பதிலாக எல் ஐ சி யே ஏற்றுக்கொள்ளும், என்பதையும் உறுதி செய்து கொடுக்கப்பட்டது.

அதாவது உடனடியாக சிவராமன் குடும்பத்திற்கு “அறுபது லட்சங்களும்”, அதன் பின் வரும் இருபது வருடங்களில்,
வருடம் “ஒரு லட்ச ரூபாய்” என்ற வீகிதத்தில் “இருபது லட்சங்களும்”, அதன்பிறகு முதிர்வு தொகையான “இருபத்தியோரு லட்சமும்”,
ஆக மொத்தம் “ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாயை” சிவராமன் குடும்பத்திற்கு எல் ஐ சி யால் உறுதி செய்து கொடுக்கப்பட்டது. அதற்காக சிவராமன் கட்டியது என்னமோ வெறும் சில ஆயிரங்கள் மட்டும்தான்.

இப்படித்தான் இருக்கவேண்டும், நம்மை நம்பியிருக்கும் நமது குடும்பத்தினருக்கு நாம் செய்து வைக்கும் மாற்று பொருளாதார பாதுகாப்பு ஏற்படுகள் என்பது.
இதில் யாருக்கேனும் மாற்று கருத்துகள் இருக்க முடியுமா?
(ஆனால் செய்து வைப்பதற்கு தான் நல்ல நாள் பார்த்துக்கொண்டிருக்கிறோம்,
இல்லையென்றால் நமது உடல் இரும்பால் செய்யப்பட்டு, நமது உயிர், ஏழு கடல்கள் தாண்டி, ஏழு மலைகள் தாண்டி, பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருக்கிறது, என்று நம்பிக்கையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.)

அதே சமயம் இந்த மாதிரி விஷயங்களை மனதில் கொண்டு, நாம் முதலீடு செய்யும் நிறுவனமும், நம்பிக்கையானது தானா?
இதனை முன்னின்று செய்து கொடுக்கும் முகவரும், நம்பிக்கைக்குரியவர் தானா?
என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். ஏனென்றால் நமக்கு தெரிந்த ஒருவர் ஒரு நிறுவனத்தில் இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறார் என்பதற்காகவோ,
அவர் சிபாரிசு செய்கிறார் என்பதற்காகவோ, லட்சங்களை கட்டி அவரை போலவே ஒரு பாலிசியை எடுத்துவைத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு எதிர்பாராத மரணம் சம்பவிக்கும்போது, அவர் குடும்பத்தினர் இழப்பீட்டு தொகையை கேட்டு அந்நிறுவனத்தின் படியேறும்போது, பெரும்பாலும் அது கோர்ட்டு வரையில் வருடகணக்கில் இழுத்துக்கொண்டு போய் தான், இழப்பீட்டுத் தொகையை சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் போராடிப் பெற வேண்டியதாயிருக்கிறது.

இந்த காலகட்டத்தில் இந்த பாலிசியை எடுத்துகொடுத்த முகவரையோ, அல்லது அப்போதிருந்த மேனேஜரையோ தேடினால்,
ஒன்று அவர்கள் நிறுவனம் மாறி வேலை செய்து கொண்டிருப்பார்கள். அல்லது வேறு வேலை எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்.

சிவராமனுக்கு இன்சூரன்ஸ் செய்து கொடுத்த முகவரோ, சிவராமனுக்கு மரணம் சம்பவித்த நாளிலிருந்து அந்த குடும்பத்தினருக்கு பக்கபலமாய் நின்று, மரணம் சம்பந்தமான அத்தனை சான்றிதழ்கள், போலீஸ் அறிக்கை, என்று தேவையான அனைத்து ஆவணங்களையும் சேகரித்து, எல்லாவற்றையும் முறையாக சமர்ப்பித்து, அந்த குடும்பத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையும் பெற்றுக்கொடுத்து, மேலும் அடுத்த இருபது வருடங்களுக்கு அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வருமான தொகையையும், அதன்பிறகு கிடைக்கவேண்டிய முதிர்வு தொகையையும் உறுதி செய்து கொடுத்தார்.

மேலும் அவர்கள் குடியிருந்த வீட்டை வீட்டின் சொந்தக்காரர் விற்பனை செய்யும் முடிவில் இருப்பதை அறிந்து கொண்டு “இருபது லட்ச ரூபாய்க்கு” தானே முன் நின்று விலை பேசி முடித்து அவர்கள் குடியிருந்த அந்த வீட்டையே, சிவராமன் குடும்பத்தினருக்கு சொந்தமாக்கி கொடுத்தார்.
அதுபோக ஏற்கனவே நிர்மலாவிற்கு தையல் தொழிலில் அனுபவம் இருப்பதால், வீட்டின் அருகிலேயே ஒரு சிறிய கட்டிடத்தில் பத்து தையல் மிஷின்களை கொண்ட ஒரு சிறிய நிறுவனத்தையும், அமைத்துக் கொடுத்து, தனக்கு தெரிந்த ஒரு பனியன் நிறுவனத்திலிருந்து தொடர்ந்து நிர்மலாவின் நிறுவனத்திற்கு வேலை கிடைப்பதையும் உறுதி செய்து கொடுத்தார்.
மேலும் அவசர தேவைகளுக்கு என்றும், தொழில் வளர்ச்சிக்கு தேவைப்படும் என்றும், தனியாக “ஐந்து லட்சம் ரூபாயை” மட்டும் வங்கியில் டெபாசிட் செய்து கொடுத்துவிட்டு, மீதமிருந்த தொகையை எல் ஐ சி நிறுவனத்திலேயே, மாதம் மாதம் உத்திரவாதமான பென்ஷன் வரக்கூடிய திட்டத்திலும் முதலீடு செய்து கொடுத்தார்.

இன்சூரன்ஸ் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல.
அதில் அடுத்தவர்களுக்கு உதவும் சேவை மனப்பான்மையே மேலோங்கி இருக்கிறது என்பதையும் அந்தக் குடும்பத்தினருக்கு அந்த முகவர் நிரூபித்து காண்பித்தார்.

இப்போது நிர்மலாவிற்கு தனது கணவன் தன்னோடு இல்லை என்ற ஒரு பெரிய வருத்தத்தை தவிர,
அவள் பிள்ளைக்கு தன் தந்தை தன்னோடு இல்லை, என்கின்ற ஒரு பெரிய குறையை தவிர இப்போது அவர்கள் வாழ்வதற்கு எந்த பிரச்சனையும் இல்லை.
சொல்லப்போனால் மற்ற குடும்பங்களுக்கு வேலை கொடுத்து அந்த குடும்பங்களையும் வாழவைக்கும் நிலையில் இருக்கிறார்கள்.
அந்த வீட்டின் தலைவன் இப்போது அந்த வீட்டின் குலதெய்வமாக மாறிப்போனான்.

என்னதான் சந்திரிகாவும், நிர்மலாவும், நெருங்கிய தோழிகள் என்றாலும் கூட, நிர்மலாவின் நிறுவனத்தில் இப்போது சந்திரிகா சக பணியாட்களுள் அவளும் ஒருவளாகத்தான் அடையாளம் கொள்ளப்படுகிறாள்.
அவள் தன் விதியை நினைத்து, நினைத்து அங்கே வேலை செய்துகொண்டிருக்கும் தருணங்களில், முன்பொரு நாள் தன் தோழியின் கைகளை பிடித்துக்கொண்டு, தான் வாழ்க்கையிலையே ஜெயித்துவிட்டதாய் ஆனந்த நடனமாடியது, அவளுக்கு எத்தனை முறை நினைவில் வந்து போனதோ? அந்த கணக்கு அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

முதன் முதலாக தோழியின் கைகளால் சம்பளத்தை பெற்றவுடன், அவள் செய்த முதல் விசயம், தன் தோழியையும் அழைத்துக்கொண்டு, அந்த இன்சூரன்ஸ் முகவரின் இல்லம் தேடிசென்று, தனது பெயரில் தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு கிடைக்கும் வகையில், ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து,
அதில் தனது இரண்டு பிள்ளைகளையும் வாரிசுதாரராய் நியமித்து,
தன் தோழி நிர்மலாவை காப்பாளராக நியமித்ததுதான்.

பாவம் அவளின் இந்த தீர்க்கமான சுய முடிவுக்கு பின்னால் எத்தனை வலிகள் நிறைந்திருக்கிறதோ? அந்த கணக்கும், அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

இந்த இரண்டு குடும்பங்களின் கதையை நாம் இங்கே இத்தனை விரிவாக பார்பதற்கு காரணமே, இன்சூரன்ஸ் மாதிரியான நீண்ட கால சேமிப்பு திட்டங்களுக்கு பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதின் தொடர்சிதான்.

ஆமாம்! ஒரு விதத்தில் அது உண்மையும் கூடத்தான்.
ஒரு சொந்த வீடு என்பது நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்நாள் கனவு என்பதால், அதை அடைவதற்கான முயற்சியில் எந்தவித சமரசத்தையும்,
அந்த திட்டம் பாதிக்கும்படியான வேறு எந்த ஒரு துவக்கத்தையும் பெண்கள் விரும்புவதில்லை.
(இது அஸ்திவாரத்தை பலப்படுத்தாமல் கோபுரத்திற்கு வர்ணம் பூசும் முயற்சி)

அடுத்து சீட்டு மாதிரியான குறுகியகால திட்டங்களில் சேர்ந்து சீக்கிரம் கையில் பணத்தை பெற்றுவிடவேண்டும் என்ற எண்ணம்.
(எத்தனை சீட்டு மோசடிகள் பார்த்தாலும் படித்தாலும், அவ்வளவு ஏன் தானே பாதிக்கப்படிருந்தாலும் கூட, அது அவர்களை பெரிதாக பாதிப்பதுமில்லை, பயமுறுத்திவிடுவதும் இல்லை.)

அடுத்து கணவன் தன் பொருளாதார சிக்கல்களையெல்லாம் மனைவியிடம் வந்து தான் கொட்டி தீர்ப்பான் என்பதால்,
இதுவே பெண்களுக்கு ஒரு பயத்தை கொடுத்துவிடுகிறது.
ஏனென்றால்.. இதை செய்துவிட்டு நாளை இதற்கு பணம் கட்ட முடியவில்லைதென்றால், இந்த மனுஷன் நம்மிடம் வந்துதானே புலம்பபோகிறார்.
எதுக்கு அவருக்கு மேலும், மேலும் சுமையை ஏற்றவேண்டும்? என்ற எண்ணமாக கூட இருக்கலாம்.

அடுத்து சில காலம் பிரிமியம் கட்டமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு, திரும்பவும் அதை கட்டுவதற்கு முயற்சிக்கும் போது,
அதனை பற்றி கணவனிடம் பேசும்போது,
“நான் இறந்து உனக்கு பணம் வரவேண்டுமா?”
என்று ஒரே சொல்லில் மனைவியின் வாயை அடைத்து,
தனது இயலாமையையும் அதனுள் மறைத்து விடுகிறார்கள் கணவன்மார்கள்.!

இப்படி இன்னும் நிறைய கரணங்கள் கண்டுபிடிக்கலாம்.
ஆனால் நண்பர்களே!
எல்லாம் சரியாக போய்கொண்டிருக்கும் வரையில் பிரச்சனையே இல்லை.
மாறாக அங்கே ஏதாவது பிரச்சனை நிகழும்போது தான் இத்தனை துன்பங்கள் ஒர் குடும்பத்திற்கு நிகழ்கிறது.
அந்த ஒரு குடும்பம் எண்ணுடையது அல்ல என்ற உங்கள் எண்ணம் ஜெயிக்கும் வரையில் மட்டும் தான் நீங்கள் பார்க்கும் உங்கள் குடும்பம் அழகான கூடு.

பார்க்கலாம் இதிலிருக்கும் பிரச்சனைகள், சிக்கல்கள்,
சிலவற்றை இனிவரும் நாட்களில்
காத்திருங்கள் தொடரும்…

கூ, சுரேஷ்வரன்
இன்சூரன்ஸ் ஆலோசகர்
9787323994

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here