என் கவி துளியே…

0
16

ஒரு கவிஞனின் விரக்தி எப்படி
இருக்கும் ஒரு சிறு கற்பனையில்..

அனுதினமும் கைகளை பிடித்துக்
கொண்டு வரும் என் எழுதுகோல்!
அனுதினமும் கற்பனையில்
சுரக்கும் என் தமிழ்!

அனுதினமும் உன் நினைவில்
உறையும் என் மனம்!
அனுதினமும் அவளுக்காக கவிதை
எழுதும் என் பேரானந்தம்!

அனைத்தும் தொலைத்து விடுகிறேன்,
நான் கவிதை கிறுக்காத நாட்களில்
எப்படி வாழ்கிறேன் என்றே
தெரியவில்லை,

கைகளில் எழுதுகோல் பிடிக்காத
நாளில்,
கற்பனையில் தமிழ் சிந்தாத
நாளில்,

நினைவுகளில் உறையாத
நாளில்,
அவளுக்காக கவிதை எழுதாத
நாளில்,

எப்படி தான் நான்
சுவாசிக்கிறேன் என்றே
தெரியவில்லை!

எப்படி தான் நான்
வாழ்கிறேன் என்றே
தெரியவில்லை!

எப்படி தான் நான்
இப்படி நடிக்கின்றேன் என்றே
தெரியவில்லை!

எப்படி தான் நான்
உன்னை நினைக்காமல்
இருக்கிறேன் என்று
தெரியவில்லை!

எப்படி தான் நான்
உன்னை காதலிக்காமல்
இருக்கிறேன் என்று
தெரியவில்லை!

எப்படி தான் நான்
உன்னை பார்க்கமால்
இருக்கிறேன் என்று
தெரியவில்லை!

எப்படி தான் நான்
உன்னை ரசிக்கமால்
இருக்கிறேன் என்று
தெரியவில்லை!

என்னை கவிஞன் என்று
புகழும் என் கவிதைகள்
என்னை விட்டு எங்கு
போனது?

தனிமையில் கண்ணீர்
விட்டு அழுகிறேன்!
ஒரு கவிதை தந்து
விட்டு செல்ல கூடாதா?

என் கவி துளியே…

-கவிஞர் பாரதி பிரபா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here