என்றும் உன் நினைவோடு…! காதலி என்ற மனைவி….!

0
34

பிரிவை தேடவில்லை
ஆனாலும்! பிரிந்துகிடக்கிறோம்!!
பிழை செய்ததாய் தெரியவில்லை!!

பிடிவாதமே! பிழையென்று புரியவில்லை!!

காலம் கடந்து செல்ல!
காற்றாய் எதிர்கால நினைவு வந்து கொல்ல!!

தாக்கமும் தவிப்பும் உன்னாலே!!
தரம்கெட்டுப் போகவில்லை சிலர் போலே!!

வம்பும் வழக்கும் என்னாலே!
வசதியாய் மற்றவர்போல்வாழ நினைத்தேன்! கெட்டசிந்தையாலே!!

அன்பை பகிரமனமில்லை!!
அதிகாரம்பகிரமால்
இருக்கமனமில்லை!

ஆணவம் ஏனோ? என்னுள்ளே!!
அதை சொல்லி யே
வளர்தனர் என்வீட்டுள்ளே!!

அன்பிற்கு கரைபோட்டேன்!!
அதிகாரத்தை திறந்து விட்டேன்!!

அவனைபிரிந்து அடை பட்டேன்!
அல்லும் பகலும்
அயராது துயருட்டேன்!

வாழ நினனைக்கிறேன் அவனோடு!!
வன்மை நீக்கி மென்மையோடு!!

வாழ வழிசொல்லாத அன்னை!! அதிகாரத்தோடு!!

வாழும் பிழையை
வழி காட்டி!!
வாயால் திமிராய்
வாழச்சொல்லும்!!

அதிகார அன்னையே
நாள்காட்டி!!

அதிகார கரை உடைபடுமா?
அவனவோடுவாழ தடைபடுமா?

விட்டுகொடுக்க மனமில்லை!!
விட்டு பிரியவும்
எனக்குதெம்பில்லை!!

ஒரு கட்டு ஒரு வாழ்வு!!
உண்மை உண்மை
தமிழர்நிகழ்வு!!

எப்பத்தான் வருவீறோ!!
என்குறைதீர்ப்பிறோ!!

எரிகின்ற விளக்கின் திரியானேன்!!
என்னையே! அழிக்கும் மெழுகானேன்!!

என்றும் உன் நினைவோடு!!
காதலி என்ற மனைவி!!

-கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here