உழைப்பாளர் தினக் கவிதை

0
13

உழைக்கும் உறவுகளே உம்மால்

பிழைக்கும் உயிர்கள் நாங்கள்
உழவன் உயிர் கொடுத்து விளைவிக்கவில்லை எனில்
உமக்கேது உணவு?

வீடு கட்டும் தொழிலாளி
இல்லையெனில்
நாமெப்படி நிம்மதியா உறங்குவது?
சுமை தூக்கி இறக்குபவர்
இல்லாதிருப்பின் எவ்வாறு பெறுவீர்
எல்லாப் பொருளும்

கழிநீர்த்தொட்டியை தூய்மை செய்யும்
உறவுகள் இல்லை எனில் நம் நிலை
என்னாகும் சிந்திப்பீர்

தெருவைக் கூட்டி சுத்தம் செய்பவர்
இல்லையெனில் நம் ஆயுள் கழிந்து விடுமே அறிவீரா?

ஆலைகளில் சாலைகளில்
உணவகத்தில் பிணவறையில்

பட்டறையில் சூளைகளில்

உழைப்பு உழைப்பு

இத்தனை பேர் இல்லையெனில்
எப்படி நகரும் நம் வாழ்க்கை

உழைக்கும் உறவுகளே
உனக்கல்லவோ சொல்ல வேண்டும்
தினம் தினம் முதல் வணக்கம்

உமது ஒவ்வொரு நாளும் நகர
வேண்டுமெனில் இவர்கள் துணை
இல்லாது என்ன செய்வீர்?

ஒவ்வொரு விடியலிலும் கடவுளைத் தொழுமுன் உனக்காய் உழைக்கும்

தொழிலாளியைத் தொழு

மனிதம் தழைக்கட்டும்

அவர் வாழ்வு என்றும் உயரட்டும்.

  -ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here