உழைப்பாளர்கள்…

0
7

வியர்வைகளால் முத்துக்கள் செய்பவனே
நீ விதைத்த வியர்வைத்துளியில் தான்
கல்லாய் கிடந்த இப்பூமிபந்து
கர்ப்பம் தரித்து உயிர்ப்பித்திருக்கிறது….
நீ உயர்த்திய தோளில் தான்
உயர்ந்திருக்கிறது இவ்வுலகம்…
ஆம்… உழைக்கும் வர்க்கம்
ஓய்வெடுக்க விரும்பினால்
தன் ஓட்டத்தை நிறுத்திக் கொள்ளும்
இப்பிரபஞ்சம்….

மானுடம் இதுவரை அடைந்த
அத்தனை உயர்வுகளும்
உழைப்பின் உருமாற்றமே…
கற்கள் சிலையானதும்
கற்பனை சிந்தனைகள் இலக்கியமானதும்
விளைநிலம் விளைச்சல் பெற்றதும்
காடுகள் நாடுகளாய் உரு பெற்றதும்
கற்காலம் கணினி காலமானதும்
உழைப்பால் மட்டுமே சாத்தியமாயிற்று…

உழைப்பின் அருமை உணர்வோம்
உழைப்பால் பெருமை கொள்வோம்
உழைப்பை போற்றியே உயர்வு கொள்வோம்…
உழைப்பால் வியர்வை சிந்தும்
ஒவ்வொரு வியர்வையாளனுக்கும்
இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்…

-சசிகலா திருமால்,
 கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here