உலக கடல் தினம் ஜூன் 8.

0
11

ஒலிவடிவில் கேட்க இங்கே சொடுக்கவும்…

பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும்பங்கு வகிக்கிறது, மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து கடல் மார்க்கமாகவே கையாளப்படுகிறது. கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதோடு, ஆக்சிசன் எனும் உயிரிவாயுவை உற்பத்தி செய்தும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் வழங்குகிறது. மேலும், காலநிலை மாற்றங்களைச் சீரமைக்க பேருதவியாக உள்ள இப்பெருங்கடல்கள், சில சமூகத்தினரின் வாழ்வாதாரங்களாக அமைந்துள்ளது.

இன்று உலக கடல் தினமாகும் (ஜூன் 8). 1992-ஆம் ஆண்டு பிரேசிலில் நடைப்பெற்ற பூமி உச்சநிலை மாநாட்டில் முதன் முறையாக கனடா இத்திட்டத்தை தாக்கல் செய்தது. அதன் பின்புதான் ஐக்கிய நாடுகளால் 2008-ஆம் ஆண்டு இத்திட்டம் அங்கீகாரிக்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து பெருங்கடல் திட்டத்தின் கீழ் அனைத்து திட்டங்களும் ஒவ்வோரு ஆண்டும் வெற்றிக்கரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

நோக்கம்

உலகின் கடல்களை பாதுகாப்பதற்காகவும், மற்றும் கெளரவிக்கிற வகையிலும், ‘உலக பெருங்கடல்கள் நாள்’ ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. கடல் ஆக்சிசன், காலநிலை கட்டுப்பாடு, உணவு மூலாதாரங்கள், மருத்துவம், மற்றும் இன்னும் பல வளங்கள் மற்றும் சேவைகள் நமக்கு வழங்குகிறது. உலக பெருங்கடல்கள் நாள், பெருங்கடல் மற்றும் அதன் ஆதாரங்களைப் பாதுகாக்க தனிப்பட்ட, மற்றும் சமூக ஒருங்கிணைப்புடன் நடவடிக்கை எடுக்க ஒரு தனிப்பட்ட வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

உலகமெங்கும் இயற்கையை நேசிப்பவர்கள் இத்தினத்தை மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் கொண்டு  இந்த கடல் தினம் கொண்டாடப்படவுள்ளது.
உலகில் கடலில் தான் அதிக சரக்கு போக்குவரத்து நடக்கிறது. உலகில் 10 கோடி பேர் தினமும், உணவு, வருமானத்துக்கு கடலை நம்பியே உள்ளனர். கடலில் பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன.

கடல் மாசு

நாம் துாக்கி எறியும் பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் தொழிற்சாலை கழிவுநீர் கடலில்
கலக்கின்றன. இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் அழிவு ஏற்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான ஊரடங்கால் கடல் மாசுபடுவது குறைந்தது. கடல்வாழ்
உயிரினங்கள் எவ்வித அச்சமின்றி வந்து சென்றதை பார்க்க முடிந்தது.

*மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் எடுத்துக்கொண்டு, பூமி வெப்பமடைவதை குறைக்கிறது.

*கடல் மூலமாக 70 சதவீத ஆக்சிஜன் கிடைக்கிறது.

*உலகில் ஆண்டுதோறும் 80 லட்சம் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கின்றன.

*உலகில் 300 கோடி பேருக்கு கடல் உணவு மூலம் புரோட்டின் கிடைக்கிறது.

மேலும், இயற்கைக்கு கேடு விளைவிக்கும் முக்கிய பொருட்களில் ஒன்றான பிளாஸ்டிக்கின் உபயோகிப்பதை குறைப்பதை உறிதிசெய்யவும் இத்திட்டத்தின் வழி மக்களுக்கு வலியுறுத்த உள்ளனர்.

நம் பூமி நான்கில் மூன்று பகுதி கடலால் சூழ்ந்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.ஆனால், தற்போது நீர் வளங்கள்,கடல்கள், ஆபத்தில் உள்ளது. 80 விழுக்காடு பிரணவாயுவை மனிதனுக்கு கடல்தான் தருகிறது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. இதனிடையே, கரியமிலாவாயுவை குறைப்பதன் மூலம் கடலையும் கடல் சார்ந்த உயிரினங்களையும் அழிவிலிருந்து காப்பாற்றுவது நமது கடமையாகும்.

இதனைத் தவிர்த்து, சில பொறுப்பற்ற மனிதர்கள் கடலில் வீசும் குப்பைகளால் கடலில் வாழும் கடற்பாசி, பவளங்கள் போன்றவை அழிவை எதிர்நோக்குகின்றனர். மனிதர்களான நாம் பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைக்க வேண்டும்,அதுமட்டுமில்லாது, கடல் சார்ந்த பொருள்களை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். அது மட்டுமின்றி, கடற்கரையை பாதுகப்பதன் வழிகளையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நம்முடைய பூமியின் எதிர்காலம் நமது கையில்.நாம் நினைத்தால் மாற்றத்தை நிச்சயமாக கொண்டுவரலாம்.உலக பெருங்கடல் தினத்தில் கடல் வளங்களை பாதுகாப்போம் என்று உறுதி ஏற்போம்.

-உங்கள் சிநேகிதன், ஜெ.மகேந்திரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here