உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம்

0
59

உலகத்துலயே மிகப் பெரிய சிவ லிங்கம் இருக்குற கோவில் நம்மூர்லதான் இருக்கு. மஹேஸ்வர சிவ பார்வதி கோவில் உலகின் மிக உயரமான சிவ லிங்கத்தைக் கொண்டுள்ள கோவில் ஆகும். இத்தகைய உலக சாதனையை படைத்த இந்த கோவில் இந்தியா புக் ஆப் ரெக்காட்ஸ் எனும் இந்திய சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இது உலக சாதனையாக விரைவில் அங்கீகரிக்கப்படும் என நம்பப்படுகிறது. மஹேஸ்வர சிவ பார்வதி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள மிகவும் நேர்த்தியான கட்டமைப்பு கொண்ட இந்த சிவ லிங்கம் உலகின் மிக பெரிய லிங்கமாக கருதப் படுகிறது. இது 111.2 அடி உயரம் கொண்டதாக விளங்குகிறது. இந்த கோவில் தமிழ்நாடு கேரள எல்லையான உதயம்குளம்கரை எனும் பகுதியில் அமைந்துள்ளது. கன்னியாகுமரியிலிருந்து இந்த இடம் 66 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி – ஈத்தாமொழி – இரணியல் – திருவிதாங்கோடு – மார்த்தாண்டம் – உதயம்குளம்கரை இந்த இடம் நெய்யாற்றின்கரையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி பயணிக்கும்போது 5 வது கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மார்த்தாண்டத்திலிருந்து நெய்யாற்றின்கரை நோக்கி பயணிக்கும்போது 15 வது கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
111.2 அடி உயரத்தில் எட்டு நிலைகளில் ஒவ்வொரு நிலையிலும் தியான மண்டபங்களை கொண்ட இந்த சிவலிங்கத்தின் உள்ளே குகைக்குள் செல்வது போன்றும் பரசுராமர் அகத்தியர் உட்பட பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும் உள்ளது. விநாயகர் உட்பட பல கடவுள்கள் சிற்ப வடிமைப்புடன் உள்ளே தரை தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் சிவலிங்க சிலையும் மேல் பகுதியான எட்டாம் நிலையில் கைலாய மலையில் சிவன் பார்வதி குடி கொண்டு இருப்பது போன்று அழகிய சிலையுடன் கட்டிட கலையுடன் கட்டப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here