வந்தாய்
சென்றாயென
பொத்தம் பொதுவாய் உரைப்பது
யாருக்கேனும் பொருந்திப் போகலாம்
உனக்கது உகந்ததல்ல
வாழ்ந்து
வாழச் செய்து
நிமிடங்களைச் செல்லப்பிராணியென
கொஞ்சச் செய்திருந்தாய்
முன்னெப்போதும்
பழகக்கப்படாத பாதைகளில்
அழைத்துச் சென்றிருக்கிறது
உன் வரவு
இங்கு பாரேன்
இத்தனை நாளாக
அழகெனப்படாதச் சூட்டுத் தழும்பு
உன் விரல் தொட்டதில்
தகதகத்துக்கிடக்கிறது
மணிக்கட்டின் மையமிருந்து.
#கனகா பாலன்