இளஞாயிறுகளாய்! இளைஞர்களே! இணையுங்கள்!!
இந்தியர்களின் இருளை எதிர்த்து!! இல்லை யெனச் செய்யுங்கள்!!
அன்பு எனும் ஆயத்தம் எடுத்து!!
அதைக்கொண்டு மனிதநேய போர்களத்தில்!!
அநீதிய சாதிய அரக்கனை முடியுங்கள்!!
ஊழலில் திகழும் உண்ணத தலைவர்களை!!
ஒருபோதும் தலைதூக்காது ஒதுக்கி வையுங்கள்!!
இலட்சிய தாகம் கொண்ட இளைஞர்களின் படைகளே!!
அலட்சியம் காணாது தாயகம் காக்க! தலைமைஏற்க!
ஊக்க இளைஞர் களே!! ஊருக்கு பத்து பேர் வாருங்கள்!!
அதில் நீதிநேர்மையில் நிமிருங்கள்!!
அதில் அக்கிரம சருகுகள் அனைத்தையும் தீக்கிரை யாக்குங்கள்!!
வாருங்கள் வாலிப வீரர்களே!!
வாடித்தவிக்கும் வரம்புமீறிய வீணர்களை
வாழ்க்கையில் பிண்ணிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளை!
வாள் கொண்டு அறுத்து வதம் செய்வோம்!! வீரத்தோழர்களே!!
கையூட்டு வாங்காத அரசு அதிகாரிகளையும்!!
இணையதளத்தில் விமர்ச்சியுங்கள்!!
இன்றே!தொடங்கி இந்தியாவை எழுச்சியுறச் செய்யுங்கள்!!
வந்தேமாதரம்!! வந்தேமாதரம்!
-கவிதை மாணிக்கம்.