இலங்கைத் தேர்தல் ஆகஸ்ட் 5-ல் – வரலாற்று வெற்றியை எட்டுவாரா ராஜபக்சே ?

0
130

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அர்ஜூனா ரணதுங்காவும் கம்பாஹா பகுதியிலிருந்து யூ.என்.பி கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.

சிங்கப்பூர், மாலவி நாடுகளைத் தொடர்ந்து கொரோனா தொற்று காலத்தில் இந்தியாவின் அண்டை நாடானா இலங்கையிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் பல காரணங்களால் வரலாற்று சிறப்புமிக்க புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கவுள்ளது. 1948-ம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற தேர்தல்களில் முதன்முறையாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் இலங்கை சுதந்திர கட்சிகள் தேர்தல்களில் முக்கிய கட்சியாக இல்லாமல் இருக்கின்றன. அந்தக் கட்சிகள், எஸ்.ஜே.பி மற்றும் எஸ்.எல்.பி.பி கட்சிகளின் கூட்டணி கட்சிகளாக செயல்படுகின்றன.

சுதந்திர இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, சாதாரண எம்.பி பதவிக்கு போட்டியிடுகிறார். இலங்கையில் இரண்டுமுறை அதிபராக இருந்தவரும் தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ச, அவருடைய பதவியைத் தக்கவைக்கும் வகையில் எஸ்.எல்.பி.பி கட்சியை தலைமையேற்று போட்டியிடுகிறார். யூ.என்.பி கட்சியின் தலைவரும், மூன்றுமுறை பிரதமராக இருந்தவருமான ரணில் விக்ரமசிங்கே, மீண்டும் ஒருமுறை கொழுப்பிலிருந்து தேர்தலை எதிர்கொள்கிறார்முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அர்ஜூனா ரணதுங்காவும் கம்பாஹா பகுதியிலிருந்து யூ.என்.பி கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள். அதில், 196 எம்.பிக்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மீதமுள்ள 29 பேர், அவர்களுடைய கட்சி பெறும் ஓட்டின் விகிதாச்சர அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்தமுறை தேர்தலில், மகிந்த ராஜபக்சவின் இலங்கை போடுஜனா பெரமுனாவுக்கும்(எஸ்.எல்.பி.பி), சஜித் பிரேமதசா தலைமையிலான சமாகி ஜனா பாலாவேகயாவுக்கும்(எஸ்.ஜே.பி)க்கும் கடுமையான போட்டி நடைபெறுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில் மிகவும் வசிகரமிக்க மற்றும் வலிமையான தலைவராக மகிந்த ராஜபக்ச இருந்துவருகிறார். அவருக்கு தனிப்பட்ட முறையில் இருக்கும் செல்வாக்கு அவர் மீண்டும் நான்காவதுமுறையாக பிரதமராவதற்கு உதவும். அவருடைய இளைய சகோதரரும், இலங்கையின் அதிபருமான கோத்தபயவுக்கு வளர்ந்துவரும் செல்வாக்கு மகிந்த ராஜபக்சவுக்கு உதவும்.

2015 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இலங்கை அரசியல்சாசணத்தில் கொண்டுவந்த திருத்ததை மீண்டும் திருத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்று இரண்டு பங்கு வெற்றியைப் பெறுவதற்கு மிகத் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் ராஜபக்ச. ராஜபக்சவின், எஸ்.எல்.பி.பி, வலிமையில்லாத கட்சியான எஸ்.எல்.எஃப்.பி கட்சி, சி.டபிள்யூ.சி கட்சி மற்றும் சில தமிழ் கட்சிகளுடனும் கூட்டணி வைத்துள்ளது.

எஸ்.ஜே.பி கட்சி தனியாக தேர்தலை எதிர்கொள்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ் கட்சிகள் பலபிரிவுகளாக பிரிந்து தேர்தலை எதிர்கொள்கின்றன.

நாடாளுமன்றத்தின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான டி.என்.ஏ, ஐந்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் தலைமையில் கூட்டணி அமைத்துள்ளது.இலங்கையின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கட்சி, 25 வயது ஜூவன் தொண்டைமான் தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது. அந்தக் கட்சி எஸ்.எல்.பி.பி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

தெற்குபகுதியின் சில பகுதிகளில் வலுவாக இருக்கும் மார்ஸிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியும் போட்டியில் இருக்கிறது. இஸ்லாமிய கட்சிகளும் போட்டியில் உள்ளன.

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அர்ஜூனா ரணதுங்காவும் கம்பாஹா பகுதியிலிருந்து யூ.என்.பி கட்சி சார்பாக போட்டியிடுகிறார். அவருடைய சகோதரரும், மத்திய அமைச்சருமான பிரசன்னா ரணதுங்காவும் அதே பதவிக்காக எஸ்.எல்.பி.பி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

பிரதமர் ராஜபக்சேவின் மகன் 34 வயதான நமல் ராஜபக்ச, அவர்களுடைய குடும்ப தொகுதியான ஹம்பந்டூடா தொகுதியில் போட்டியிடுகிறார். மகிந்த ராஜபக்ச, கொழும்புவுக்கு அருகிலுள்ள குருநீங்ளா தொகுதியில் போட்டியிடுகிறார். 2019-ம் அதிபர் தேர்தலில் கோத்பயாவிடம் தோல்வியடைந்த சஜித் பிரமதேசா, ஹம்பந்டூடா தொகுதியிலிருந்து கொழும்பு தொகுதியில் போட்டியிடுகிறார். ஒருகாலத்தில் அந்த தொகுதியில் அவருடைய அப்பாவான அப்போதைய அதிபர் ரணசிங்கே பிரேமதாவின் கோட்டையாக இருந்தது.

2019-ம் ஆண்டு ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு, இஸ்லாம் தீவிரவாதமும் இந்த தேர்தலில் முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்கள் மற்றும் கொழுப்பு பகுதியில் இஸ்லாமியர்களுக்கு குறிப்பிடத்தகுந்த வாக்குகள் உள்ளன.

இலங்கையில் மிக அதிக அளவில் முதலீடு செய்துள்ள வெளிநாடு சீனா. அதுவும் இந்த தேர்தலில் முக்கிய விவகாரமாக இடம்பெற்றுள்ளது. தேசிய இறையான்மையை பணத்துக்காக சீனாவிடம் அடகுவைத்துவிட்டதாக ஆளும்கட்சிகள் மீது எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றனர். இலங்கையின் தேர்தல் முடிவுகளை சீனா தீவிரமாக உற்றுநோக்குவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா மற்றும் ஜப்பானுக்கு சவால் விடுப்பதற்காக இலங்கையில் ஏராளமான முதலீட்டை சீனா செய்துள்ளது. இலங்கையிலுள்ள 2.2 கோடி மக்கள் தொகையில், 1.65 கோடி பேருக்கு வாக்கு உள்ளது. எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்ற யோசனையில் 28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுடைய முடிவுதான் இந்தத் தேர்தலை தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here