இராஜபாளையம் PACR அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் உணவு பொட்டலங்களை இன்று (31.05.2021) வழங்கினார்.

0
28

இராஜபாளையம் தொகுதியில்  கடந்த வருடம் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கியதுபோல் இந்த ஆண்டும் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR.இராமச்சந்திரன் அவர்கள் தொழில்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் ஆலோசனையின்படி கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு நகர பேரூர் மற்றும் கிராமப்பகுதிகளில் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய பொதுமக்களுக்கு (6000 நபர்கள்) உணவை தயார்செய்து உணவு தரமாகவும் சுகாதாரமாகவும் உள்ளதா என MLA அவர்கள் உணவை சாப்பிட்டு பார்த்து பேக்கிங் செய்து இராஜபாளையம் PACR அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் உணவு பொட்டலங்களை இன்று (31.05.2021) வழங்கினார். இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள் திமுக ஆட்சியில் யாரும் உணவிற்கு சிரமப்படும் நிலை இருக்கக்கூடாது எனக் கூறினார் மேலும் இராஜபாளையம் நகர மற்றும் கிராமப்பகுதியில் உணவு தேவைப்படும் நபர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டால் அவ்விடத்திற்கே வந்து உணவு வழங்கப்படும் எனக் கூறினார். இந்நிகழ்வில் தலைமை மருத்துவர் பாபுஜி நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா அவர்கள் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன் துணை அமைப்பாளர் இக்சாஸ் பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் மற்றும் கழக நிர்வாகிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்பு எண்கள்-

இராஜபாளையம் நகர் பகுதி : ராமமூர்த்தி 9442057116

இராஜபாளையம் பேரூர், கிராமப்பகுதி : சுப்புராஜ் 8072886771.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here