இராஜபாளையம் தொகுதியில் நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையான ரூ.2000 ஐ வழங்கினார்.

0
14

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிவாரண நிதியாக அனைத்து குடும்பத்திற்கும் ரூ.2000ஐ முதல் தவணையாக வழங்க உத்தரவிட்டுள்ளார் அதன்படி இன்று (15.05.2021) இராஜபாளையம் தொகுதியில் முகவூர் , சேத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளிலும் மற்றும் இராஜபாளையம் 1066 கூட்டுறவு மொத்த பண்டகசாலையின் கீழ் செயல்படும் அக்ரஹாரம் சோமையாபுரம், இரட்டை வாட்டர் டேங்க் அருகில் உள்ள நியாய விலைக்கடைகளிலும் பொதுமக்களுக்கு நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையான ரூ.2000 ஐ வழங்கினார். இந்நிகழ்வில் பொதுமக்களிடம் பேசிய MLA அவர்கள், நமது தமிழக முதலமைச்சர் அவர்கள் தற்போது முதல் தவணையாக இராஜபாளையம் தொகுதியில் உள்ள 98030 அரிசி குடும்ப அட்டைகளுக்கும் 2000 ரூபாய் வழங்கியுள்ளார் அடுத்ததாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அடுத்த தவணையாக 2000 ரூபாயும் 14 பரிசு பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்படும் இதனை பொதுமக்கள் அனைவரும் பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் DR சுகுமார் CSR MD முருகன் வட்டாட்சியர் ரெங்கநாதன் வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன் திமுக நகர தெற்கு பொறுப்பாளர் ராமமூர்த்தி அவர்கள் பொதுக்குழு உறுப்பினர் ஷியாம்ராஜா மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன் சிங்கப்புலி அண்ணாவி கவுன்சிலர் முத்துலட்சுமி தொந்தியப்பன் வார்டு செயலாளர்கள் கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here