மசாஜ் முறையானது மற்ற உடற்பயிற்ச்சி போல் அல்லாமல் உடலின் அதிக நகர்த்தல் ஏதும் இல்லாமல் செய்யும் உடற்பயிற்ச்சியாகும்.
இதன் கிரேக்க வார்த்தையான “மாஸியன்” என்ற வார்த்தையில் இருந்து மருவி வந்ததாகும்.
இதுவே பிரஞ்சு மொழியில் “தேய்த்துவிடல்” என்றும், அதேபோல் அரேபிய வார்த்தையில் “மாஸா” எனப்படும். அதன் பொருள் “தொடுதல்” அல்லது உணர்தல், கையாளுதல் ஆகும்.
மஸாஜானது உடலையும், மனதையும் ஊக்குவிக்கிறது.
இதனை முறையாக பயன்படுத்தும் பொழுது நல்ல பலனைத்தரும்.
மஸாஜ் இயற்கைமுறை மருத்துவத்தில் ஒன்றாகும்.
நல்ல ஆரோக்கியத்தை அளிக்க கூடியதாகும்.
மனித உடல் மீது அழுத்தம், பிடித்தல், நகர்த்தல், அதிர்வு அளித்தல் ஆகியவற்றை கைகளினாலோ அல்லது இயந்திரத்தின் துணைகொண்டோ செய்யப்படுவது மஸாஜ் ஆகும்.
உடலின் தசைகள், தசைநார்கள், இணைப்பு தசைகள், நாளங்கள் ஆகிய இந்த பகுதிகளை மையப்படுத்தி மஸாஜ் செய்யப்படுகிறது.
இந்த மஸாஜானது கைகள், விரல்கள், கால்கள், முழங்கைகளை பயன்படுத்தி மஸாஜ் செய்யலாம்.
80 வகையான அங்கீகரிகக்ப்பட்ட மஸாஜ்கள் உள்ளது
மஸாஜ் செய்யும் போது உடல் உறுப்புகளை வலிமையடையச் செய்யும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.
மஸாஜின் உடற்கூறு விளைவுகள்.
உடலின் நரம்பு மன்டலம் மூலம் செய்யப்படும் தன்னிச்சையான விளைவுகள்.
இரத்க்குழாயின் உள்விட்டம் அதிகரிக்கச்செய்தல்
ஜீரணத்தை தூண்டுதல்
தசைகளின் அடர்த்தியை அதிகரித்தல் மற்றும் குறைத்தல்
அடிவயிற்றின் தசைகளின் வேலையை அதிகரிக்கச்செய்தல்
தளர்வு நிலையை தூண்டுகிறது.
தசைகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.
இதய செயல்பாட்டை தூண்டுகிறது,
சுருங்குதல் தன்மையை அதிகரிக்கிறது
நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது
செயல்களின் மூலம் ஏற்படுத்தும் விளைவுகள்.
இதயத்தின் இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்
நிணநீர் ஓட்டத்தையும், நிண நீர் வடிகால்களையும் அதிகரிக்கிறது
இரத்த ஓட்ட திறனை அதிகரிக்கிறது
சளியின் கட்டித்தன்மையை உடையச் செய்கிறது
உடல் உறுப்புகளில் பைபுரோஸிஸ் நோயை பரப்பும் இணைப்பை முறிக்கிறது
தசை நார்களை நீட்டவும், தளர்த்தவும் உதவுகிறது
தசைகளின் வெப்பத்தை கூட்டுகிறது
வாயு பரிமாற்றம் மற்றும் வளர்சிதை மாற்றங்களை அதிகரிக்கிறது
வடு திசுக்களை நீட்டுகிறது
தோலின் அடர்த்தியை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்கிறது;
உடலினை அசைக்கும் போது அதன் வேகத்தினை அதிகரிக்கிறது
மூட்டு இயக்கத்தினை சரியான முறையில் இயங்கச் செய்கிறது
தசை சீரின்மையை நீக்குகிறது
பலவீனமான திசுக்களை வலுப்படுத்துகிறது
மஸாஜின் பயன்கள்
பொதுவாக செய்யப்படும் மஸாஜ் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பலனளிக்கும்,
மேலும் பல வழிகளிலும் உபயோகமாக உள்ளது.
நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றது.
நாம் விடும் மூச்சினை பயன்படுத்தி
உடலில் உள்ள கழிவுகளை நீக்கும்.
உறுப்புகளான சிறுநீரகம், நுரையீரல், தோல், மற்றும் குடல் ஆகிய உறுப்புகளின் துணையுடன் உடலில் உள்ள விஷத்தன்மை மற்றும் தேங்கியிருக்கும் அழுக்குகளை நீக்குகிறது.
மேலும் இரத்த சுழற்சி மற்றும் வளர்சிதை செயல்களை தூண்டுகிறது.
மஸாஜ் செய்வதினால் முகத்தில் தோன்றும் சுருக்கங்களை நீக்குகிறது.
ஒடுக்கலான கன்னங்களை சரிசெய்கிறது.
கழுத்து மற்றும் கன்னங்களை உறுதிபடுத்துகிறது.
புண் மற்றும் உணர்ச்சியற்ற நிலையினை போக்குகிறது
திறனாய்வு மருத்துவர்களின் ஆராய்ச்சியின் படி மஸாஜ் வலிநிவாரணியாகவும், மற்றும் மனஅழுத்தத்தையும் குறைக்கிறது.
தற்காலிகமாக இரத்த அழுத்தத்தினை குறைக்கின்றது.
துடிப்பின் அளவையும் சீராக்குகிறது.