இயற்கையின் வாழ்த்துக்கள்..!

0
24

தங்கத்தாரகை என் கண்மணிக்கு,
கதிரவனின் கதிரில் இழை எடுத்து,
சந்திரனின் குளுமையில் நூல் கோர்த்து
நான் பரிசளிக்க முயன்றேன்…
என் முயற்சியில் தென்றல் கைகோர்த்து
இழை ஓடியது மேகம் மெல்ல
இழையில் இணைந்தது.
ஆஹா அற்புதம் என்று
என்றெண்ணினேன், அட..!
நானும் உங்களில் உண்டு என்று
வானவில் வண்ணங்களை அர்ப்பணித்தது…,
மலரும் மணத்தினையும்,
மென்மையும் தந்து சென்றது…,
அத்தனையும் உன் மென்மை,
குளுமைக்கு ஈடில்லை தான்
என்றாலும் என் வாழ்த்துக்களை
மட்டும் நான் தந்து செல்கிறேன்…

      -பானு செல்வம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here