இம்சையில் பூத்த அன்பூ…

0
30

இம்சையில் பூத்த அன்பூ…

எவ்வளவு துரத்தினாலும்
காலை சுற்றும் நாய்குட்டியாய்…
இம்சையில் பூத்த அன்பென்பது
ஒரு காட்டாற்று வெள்ளம்
கரை மீறும் அலை
உறை தேடும் வாள்…
ஒட்டி பழகும் அட்டைப்பூச்சி
விட்டுவிலகா உயிரின் ஓட்டம்
தொட்டுத்தொடரும் இம்சையின் மிச்சம்
பட்டுப் படரும் பரவசத்தின் எச்சம்…

கம்பன் வரிகளுக்குள் அடங்கிடாத கவி காட்டாறு
பாரதியும் தேடிதேடி தோற்ற
கலைப்பொருளின் விதைப்பொருள்…
ஆம்….
இம்சையில் பூத்த அன்பிற்கு
அர்த்தங்கள் கிடையாது
எவ்வளவு நேசித்தாலும் போதாமல்
இன்னும் கொஞ்சம் நேசிக்க வேண்டியே கெஞ்சும்
இம்சையில் பூத்த
இந்த பொல்லாத அன்பு…

-சசிகலா திருமால்
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here