ஆகஸ்ட்10,2020 இன்று காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருக்கின்றன.
மாணவர்கள்
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in
என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று
அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது.
மேலும் மாணவர்கள் தங்களுடைய உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவு எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. அதில் பார்த்தும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
அதேபோல், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை இன்று காலை 10 மணியில் இருந்து பதிவிறக்கம் செய்து, வைத்துக்கொள்ள அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்துவருகிறது.