இனிய மனைவி அறுசுவை உணவாகிறாள்..!
உணவில் இல்லை உள்ளத்தில்..!
உண்ணும்உணவில் உப்பாய்! கலந்திருக்கிறாய்!
இன்பதுன்பங்களில்சேர்ந்தேபயணிக்கும்
இனிப்பாகிறாய்!
இருவரின் ஊடல்களில் ,பிடிப்பில் புளியானாலும்!!
சாம்பாரில் கெடாத புளியாகிறாய்!!
வரும்வரவை மிஞ்சிய! செலவுவை நான்செய்ய!
கொடும் உரப்பாகிறாய்!!
மாமனார் ,மாமியார், மச்சினியை,
மதிக்காத போது! கசப்பாகிறாய்!!
நிறைகுறை காண! கண்டும் காணாது!
நிம்மதியாய் , குடும்பம் பயணிக்க!
வெற்றிலை சுண்ணாம்பு உரப்புக் கிடையே !துவர்ப்பு,
பாக்காகி !பாங்காய்
வாய் மணக்க சிவக்கிறாய்!
-கவிதை மாணிக்கம்.