இந்த ஆண்டு +1 வகுப்பிற்கான புதிய பாடப்பிரிவுகள் (Groups)

0
117

இந்த ஆண்டு தமிழக அரசால் மேல்நிலைக் கல்வியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அறிவியல் பாடப்பிரிவுகளால் தமிழக மாணவர்கள் எதிர் வரும் காலங்களில் சந்திக்கும் மாபெரும் சிக்கல்கள் – ஓர் அலசல்

இந்த ஆண்டு +1 வகுப்பிற்கான புதிய பாடப்பிரிவுகள் (Groups):

♦️ Part – 1: மொழிப்பாடங்கள்
தமிழ்/தெலுங்கு/உருது/கண்ணடம்/மளையாளம் உள்ளிட்ட மொழிகள்

♦️Part – 2: ஆங்கிலம்

♦️Part – 3:

அறிவியல் மற்றும் கலை பாட பிரிவுகள்.

Group – I
கணக்கு
இயற்பியல்
வேதியியல்

இந்த பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களுக்கு
பொறியியல்
வாய்ப்பு உண்டு. மற்றும் Polytechnic,
B.Sc., Physics, Chemistry, Maths, C.S, BCA போன்ற course- களையும் படிக்கலாம்.
இதற்கு முன் இருந்த பாடப்பிரிவில்
உயரியியல் பாடம் இருந்ததால்
மருத்துவம் சாரந்த படிப்பில் வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது சாத்தியமில்லை.

Group – II
இயற்பியல்
வேதியியல்
உயரியியல்

இதை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் சாரந்த படிப்பில் சேர முடியும்(MBBS,BVSC,BDS,NURSING etc.,).
அடுத்தாக B.Sc., Agri, Botany, Zoology, போன்றவற்றை படிக்க முடியும். இப்பிரிவில் கணக்கு பாடத்தை நீக்கியதால் ஆனால் BE, Polytechnic மற்றும் B.Sc., Physics, Chemistry, C.S, BCA போன்றவற்றை படிக்க முடியாது.
மேலும் இவர்கள் NEET தேர்வில் வெற்றி பெறுவது கடினமே.
காரணம் NEET
தேர்வில் வருகின்ற Physics, Chemistry சார்ந்த problems போடுவதற்கு கணித அறிவு மிக அவசியம்.

*Group III
கணக்கு
இயற்பியல்
கணனி அறிவியியல்

இந்த பிரிவில் சேரும் மாணவருகளுக்கு
பொறியியல் மற்றும் மருத்துவம் சாரந்த படிப்புகளுக்கு வாய்ப்பே இல்லை.
Lateral entry மூலம் Polytechnic படிப்பிலும் சேரமுடியாது.
B.Sc Maths, Physics, Comp.Science, BCA- தவிர வேறு கோர்ஸ்களில்
சேரவே முடியாது.
ஏனெனில்
முதலாமாண்டோ
அல்லது
இரண்டாமாண்டோ
துனைப்பாடமாக வேதியியல் பாடம் உண்டு.
பிளஸ் 2 வகுப்பில் வேதியியல் பாடத்தை படிக்காத காரணத்தால் சேரவே முடியாது.
பொறியியல் பாடப்பிரிவில்
வேதிபொறியியல்
பயோ வேதியியல்
போன்ற பிரிவுகளில் சேர முடியாது.
ஒருவேளை இந்த பாடப்பிரிவுகளுக்கு வேதியியல் பாடம் தேவையில்லை என சொல்லிவிட்டதா?
அந்த கடவுளுக்குத்தான் தெரியும்.

Group – IV
வேதியியல் உயிரியல் மனையியல்

இந்த பாட பிரிவை எடுத்து படிக்கும் மாணவர்களின் நிலைமைதான் மிகவும் கடினம். இப்பிரிவில் கணக்கு பாடத்தை நீக்கியதால் ஆனால் BE, Polytechnic மற்றும் B.Sc., Agri, Physics, Chemistry, C.S, BCA போன்றவற்றை படிக்க முடியாது.
இவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு B.Sc Botany, Zoology, Nursing etc., போன்ற உயிரியல் சார்ந்த பட்டப்படிப்புகள் மட்டுமே.
அதுவும் வேதியியல் பட்டப்படிப்பு படிக்க முடியாது.
துனைப்பாடமாக முதலாமாண்டோ
இரண்டாமாண்டோ கணக்கு பாடம் படிக்க வேண்டும்.

இதன் விளைவுகள்:

*மேற்கண்ட காரணங்களால் மாணவர்களின் கல்லூரி கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளது. மறுக்கப்பட்டுள்ளது.

*இதனால் 10-ம் வகுப்பு வரை state board -ல் படிக்கும் பல மாணவர்கள் CBSE பள்ளியில் சேரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
(காரணம் அங்கே கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அடங்கிய பாடப் பிரிவு உள்ளது).

*அடிப்படையில் கணக்கு பாடம் படிக்காமல் இருப்பதால் அப்பாடப்பிரிவை அடிப்படையாகக் கொண்ட கோர்ஸ்களில்
சேர்க்கை கிடைப்பது சந்தேகமே. சில தரமற்ற தனியார் கல்லூரியில் வேண்டுமானால் இடம்
கிடைக்கும்.

*TNSPC, UPSC,
BANKING, RRB
போன்ற போட்டி தேர்வுகளில் கணக்கு பாடத்தை படிக்காமல் வெற்றி பெறுவது மிகவும் சிரமம்.

இப்படி பல குழப்பங்களை உருவாக்கும் புதிய பாடப்பிரிவுகளை
(கணக்கு
*வேதியியல்
தவிர்த்து சில பிரிவுகளை) அறிமுகப்படுத்துவதால் எதிர்காலத்தில் மாணவர்கள் பெருந்துன்பத்திற்க்கும்
மேல்படிப்பு,
வேலைவாய்ப்பு போன்றவற்றில் பல பிரச்சினைகளையும்
சந்திக்க நேரிடும் என பெருவாரியான முதுகலை ஆசிரியர்கள்
எச்சரிக்கை செய்கின்றனர். மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்தும் உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here