இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு

0
22

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் காலமானார்.
பிப்ரவரி 22,2021 இன்று 10:05 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளனர் .

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருந்தது.

சிறுநீரக தொற்று, சிறுநீரக செயலிழப்பு, குறைந்த இரத்த அழுத்தம் போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ள தா.பாண்டியன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும், உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்தது.

வயது மூப்பு, உடல்நலக் குறைபாடுகளால் கடந்த சில ஆண்டுகளாகவே தா.பாண்டியன் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார். உடல்நலம் சற்று தேறிய நிலையில், சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்றார். அங்கிருந்து சென்னை திரும்பிய நிலையில், அவருக்கு நேற்று உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here