இந்திய அரசு நேரு இளையோர் மையம் என் பி எம் கே கலை பண்பாட்டு மன்றம் இணைந்து மாணவ மாணவிகளுக்கான யோகாசனப்போட்டி பொதிகை நகர் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளை பத்தமடை,சுவாமி சிவானந்த ஆசிரமம் யோகா பயிற்சியாளர் ஜெயமோகன் நடத்தினார். போட்டிகளில் மூன்று வயது வரை ஒரு பிரிவாகவும் 4 முதல் 11 வயது வரை மற்றொரு பிரிவாகவும் மூன்றாவது பிரிவாக 19 வயதில் இருந்து 35வயது வரை மூன்றாவது பிரிவாகவும் நான்காவது பிரிவு 36 வயது முதல் 60 வயது வரை என்று நான்கு நிலைகளில் போட்டிகள் நடைபெற்றது. 150க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பெரியோர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் மிகச்சிறப்பாக ஆர்வமாக கலந்து கொண்டார்கள். பொதிகை நகர் ஜோஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் அனிதா தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக பாளையங்கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் எஸ். சேகர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அளித்து பாராட்டினார் விழாவில் மலபார் கோல்ட் & டைமண்ட் நிறுவன திருநெல்வேலி கிளை தலைவர் அமீர்பாபு துணை தலைவர் நிஷாந்த், கலந்துகொண்டார்கள் விழாவில் போட்டிகளை யோகா பயிற்றுநர் தேவிப்பிரியா முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம் வயதில் பல சாதனைகளை படைத்த 41க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்ற இளம் சாதனையாளர் முனைவர் கா. பிரிஷா தன்னுடைய சாதனை யோகாசனங்களை செய்து காட்டி அனைவரது பாராட்டுகளைப் பெற்றார். நூலகர் அகிலன் முத்துகுமார், கயிறு சுற்றுதலில் சாதனை முயற்சியாக 30 வினாடிகளில் 100 சுற்று சுற்றி அனைவரின் பாராட்டையும் பெற்றார். விழாவிற்கான பணிகளைNPNK,கலைபண்பாட்டு மன்றத்தை தளபதிகள் சுரேஷ் குறும்பட இயக்குனர் லெனின் மற்றும் அங்கத்தினர்கள் நேரு யுவகேந்திரா சங்கர் மற்றும் மலபார் கோல்ட் தமிம்ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் வரவேற்பு, நன்றியுரை ஆகிய பணிகளை என் பி எம் கே கலைபண்பாட்டு மன்ற இயக்குனர் கவிஞர் மு .வெ.ரா சிறப்பாக செய்திருந்தார்.
Latest article
பட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று “ஓட்டுநர்கள்” கவிதை
https://www.youtube.com/watch?v=g5hH25tCHcw
சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட "பேசும் தென்றல்" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று "ஓட்டுநர்கள்" கவிதை.
#மகிழ்ச்சிFm #MagizhchiFm
ஆனந்தத்தின் அலைவரிசையாக
உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...
உங்கள் மகிழ்ச்சி Fm ல்
24×7 இனிய...
நம்பிக்கை..!
கவலைப்பட்டு!
கண்ணீர்விட்டு!!
திரிவதாலோ!
காயங்கள் காணமல்
மறைவதில்லை!!
வியர்வையை
வித்தாகி!
நம்பிக்கையை
வீரிய நிலமாக்கி!!
உழைப்பை!
மூலதனமாக்கு!
உன்னை தேடிவரும்
வெற்றி இலக்கு!!
- கவிதை மாணிக்கம்.
ஏன் ? எதற்கு ? இன்சூரன்ஸ் ? பகுதி -19.
நண்பகலை நெருங்கிக் கொண்டிருந்த ஒரு வேளையில் எனது அலுவலகத்திற்கு ஏழு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை வந்தாள். ஓரிரு நாட்கள் போட்டு கசங்கிய அழுக்கு கவுனுடனும்,
கலைந்த கேசத்துடனும் இருந்தாலும் கூட,
அந்த நிலைக்கு...