இந்தியாவின் மிகப் பெரிய மசூதி,தேவாலயம்,மற்றும் கோவில்கள்

0
237

ஜும்மா மசூதி

புதுடில்லியில் உள்ள ஜும்மா மசூதி தான், இந்தியாவின் மிகப் பெரிய மசூதியாகும். 1656ம் ஆண்டு முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்ட இந்த மசூதியில், ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தொழுகை நடத்த முடியும். 15 ஆண்டுகள் நடந்த இந்த மசூதியின் கட்டுமானப் பணியில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அமர்நாத் குகை பனி லிங்கம்

ஜம்மு – காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை தான், இந்தியாவின் மிகப் பெரிய குகை. குகையின் உயரம் 75 அடி. மலைக்குள் 80 அடி ஆழத்தில் பள்ளம் உள்ளது. ஹிந்துக்களின் புனிதத் தளமாக கருதப்படும் அமர்நாத் குகை பனி லிங்கம் புகழ் பெற்றது.

கோவா புனித கதீட்ரல் தேவாலயம்

இந்தியவின் மிகப் பெரிய மற்றும் பழமையான தேவாலயம், பழைய கோவாவில் உள்ள புனித கதீட்ரல் தேவாலயம். 1510ம் ஆண்டு களிமண், பாறைகள் மற்றும் வைக்கோலைக் கொண்டு இந்த தேவாலயம் கட்டப்பட்டது. மீண்டும் 1562ம் ஆண்டு போர்ச்சுக்கீசிய வைஸ்ராய் டோம் பிரான்சிஸ்கோ என்பவர் தலைமையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைவதற்கு 90 ஆண்டுகள் ஆயின.

ராமேஸ்வரம் ராமநாதஸ்வாமி

நாட்டிலேயே மிகப் பெரிய நடைக் கூடத்தைக் கொண்ட கோயில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதஸ்வாமி கோயில். 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் வளாகத்தில் உள்ள நடைக் கூடத்தில், மொத்தம் 1200 பிரம்மாண்டமான கிராணைட் பாளங்கள் பதிக்கப்பட்டுள்ளன. கடலுக்கு அருகில் அமைந்திருக்கும் இக்கோயிலின் கோபுரம் 54 மீட்டர் உயரம் கொண்டது.

கோமதீஸ்வரர் சிலை

கர்நாடகாவின் சரவணபெலகோலாவில் உள்ள கோமதீஸ்வரர் சிலை தான், இந்தியாவின் மிகப் பெரிய கடவுள் சிலை. 17 மீட்டர் உயரம் கொண்ட இச்சிலையை 30 கிமீ தூரத்திலிருந்தும் காண முடியும். மலை உச்சியில் ஒரே கிராணைட் பாளத்தில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை கிபி 983ம் ஆண்டு நிறுவப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here