ஆரோக்கியமான வாழ…!

0
142

நம் ஆரோக்கியத்தை ஆராயும் வழி.
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை, நிறந்துப் பார்க்க சில எளிய வழிமுறைகள். ஸ்கேன்,எக்ஸ்ரே, ப்லட் டெஸ்ட், யுரின் டெஸ்ட், மொஷென் டெஸ்ட் எதுவும் வேண்டாம். ஆயிரம் கணக்காக பணம் செலவழிக்கவும் வேண்டாம். கீழ் கூறப்படும் ஐந்து விஷயங்களை சரி பார்த்தாலே போதும்.

  1. தரமான பசி
  2. தரமான தாகம்
  3. தரமான உறக்கம்
  4. முழுமையான கழிவு நீக்கம்
  5. மன அமைதி

தரமான பசி
• உழைப்புக்கேற்ற பசி இருக்க வேண்டும்
• அதிக உழைப்பு அதிக பசி, குறைந்த உழைப்பு குறைந்த பசி
• குறைந்தது 2 வேளை பசி இருக்க வேண்டும்
• உண்ட உணவு சுலபமாக செரிக்க வேண்டும்
• உண்ட பிறகு வயிறு உப்புசம், பாரம், அசதி, தூக்கம் இருக்கக் கூடாது

தரமான தாகம்
• உழைப்புக்கேற்ற தாகம் இருக்க வேண்டும்
• உதடு காய்வது தாகம் அல்ல
• தாகத்தை புரிந்துகொள்ள வேண்டும்
• தாகத்துக்கு வெறும் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும், புட்டியில் அடைத்த, சுவை, மனம், இரசாயனம் கலந்த நீரை அருந்தக் கூடாது

தரமான உறக்கம்
• படுத்த 10 நிமிடத்தில் உறக்கம் வர வேண்டும்
• இடையில் காலை வரை எழுந்திருக்கக் கூடாது
• தூங்கி எழும் பொழுது அசதி இருக்கக் கூடாது
• தூங்கி எழுந்ததும் சுரு சுருப்பாக இருக்க வேண்டும்

முழுமையான கழிவு நீக்கம்
• காலையில் தினமும் சுலபமாக மலம் கழிக்க வேண்டும்
• மலம் முழுமையாகச் சுலபமாக வெளியேற வேண்டும்
• மலம் கழித்த திருப்தி இருக்க வேண்டும்
• சிறுநீர் சுலபமாக வெளியேற வேண்டும்
• சிறுநீர் கழித்த திருப்தி இருக்க வேண்டும்

மன அமைதி
• மனம் அமைதியாக இருத்தல் வேண்டும்
• எந்தச் சூல் நிலையிலும் மனம் பயம், சஞ்சலம் அடையக் கூடாது
• அளவுக்கு மீறிய மகிழ்ச்சி, கவலை, பயம், துக்கம், கோவம், தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சல் இருக்கக் கூடாது.
• மனம் எப்பொழுதும் சம நிலையில் இருக்க வேண்டும்.

  1. பசி
  2. தாகம்
  3. உறக்கம்
  4. கழிவு நீக்கம்
  5. மன அமைதி

மேலே சொன்ன ஐந்தும் குறைந்தாலும், கூடினாலும், ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். நோய்கள் உருவாகும்.

ஆரோக்கியத்தை தக்க வைத்துக்கொள்ள

• பசி இன்றி உண்பது தவறு
• தாகம் இன்றி தண்ணீர் அருந்தக் கூடாது
• உறக்கம் கண்டிப்பாக இரவு 10 – 4 மணி வரை தூங்க வேண்டும்
• கழிவு நீக்கம் – தினமும் காலையில் கழிவுகள் வெளியேற வேண்டும்
• மன அமைதி – மனதைக் கவனிக்க வேண்டும்.

மேலே கூறப்பட்ட ஐந்தும் சரியாக, அளவாக இருந்தால், ஒரு மனிதன் கண்டிப்பாக ஆரோக்கியமாக இருப்பான், ஆரோக்கியமாக இருக்கிறான்.
நோய்களைப் பார்த்து பயப்படத் தேவை இல்லை. எந்த நோயாக இருந்தாலும், எவ்வளவு கடுமையாக இருந்தாலும், நிச்சயமாக குணமாகும்.

உங்கள் உடலை நீங்கள் கவனித்தால், உங்கள் உடல் உங்களை கவனித்துக் கொள்ளும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here