ஆன்மீக ஓவியம் முதல் அரசியல் தலைவர்களின் ஓவியம் வரை தத்ரூபமாக வரைந்து அசத்தும் மாணவி தனிக் ஷா..!

0
260

ஆன்மீக ஓவியம் முதல்,அரசியல் தலைவர்களின் ஓவியம் வரை தத்ரூபமாக வரைந்து அசத்தும் மாணவி தனிக் ஷா.இவர்திருநெல்வேலி மஹாராஜா நகரைச் சேர்ந்தவர். இவர் 12 ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர இருக்கிறார். தந்தை விஜய ஆனந்த்,தாயார் தணிகைச்செல்வி .தனிக்ஷா சிறு வயதில் இருந்தே ஓவியங்கள் வரைவதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்.

எதைப்பார்த்தாலும் அச்சு அசலாக வரையும் திறமை படைத்தவர்.புகைப்படங்களில் இருப்பர்களையும் அப்படியே , அழகாக ஓவியமாக வரைந்து அசத்துகிறார்.இவர் ஓவியம் வரைவதற்கென்று தனியாக இதுவரை எந்தப்பயிற்சியும் எடுத்துக்கொள்ளாமலேயே ஓவியங்களை வரைந்து கலைத்திறமையை வளர்த்து வருகிறார் .

எதிர்காலத்தில் புகழ் பெற்ற ஓவியர்களைப்போல், மிகச்சிறந்த ஓவியராக வளர்ந்து புகழ்பெற,மகிழ்ச்சி இணைய வானொலி வாழ்த்தி மகிழ்கிறது.வாழ்த்துக்கள் தனிக் ஷா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here