ஆண்பா…

0
18

ஆண்பா…

மனதின் மாசறுக்கும்
மன்மத இரவொன்றில்
நிலவின் நிசப்த ஒளியில்
மெல்லிய தென்றலென
நீ மேனி தீண்டுகையில்
உயிரின் ஆழம்வரை விரவியிருந்த
மௌனமது உடைந்தெழ…
உன் விழி அம்பில் வீழ்ந்து
உரசிக்கொண்ட அதரங்களோ
காதலின் சுவையறிய….

உன்னில் மூழ்கி என்னைத் தேடும்
இதமான தேடலொன்றில் தொலைந்தே
செத்தொழிகிறதென் விரக தாபங்கள்…
நீ எனை வென்று நான் உன்னில்
தோற்கும் நிமிடங்களிலெல்லாம்
ஆணாகி அணைத்து ஆரமுது ஊட்டுகிறாய்…
இரண்டற கலந்துவிட்ட
இதயங்களின் நரம்புகளில்
இழையோடும் அன்புதனில்
என் உயிரினில் உறைந்திடும்
ஆண்பா அவன்…

-சசிகலா திருமால்
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here