தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட் 31ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.
ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகளற்ற ஊரடங்கு.
பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி
மாநகராட்சி பகுதிகளில் கோவில், மசூதிகள், தேவாலயங்களில் பொதுமக்கள் தரிசனத்துக்கு தடை
பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும்.
பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து தடை தொடர்கிறது.
ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும்
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமானப்போக்குவரத்திற்கான தடை தொடரும்
காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி
இ-பாஸ் நடைமுறைகளில் மாற்றம் இல்லை!
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளி மாநிலங்களுக்கு செல்லவும் இ-பாஸ் கட்டாயம்
சென்னை எல்லைக்குட்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மேலும் தளர்வு
ஆகஸ்ட் 15ம் தேதி மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும்.
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும -தமிழக அரசு