அழிவை நோக்கி அண்டம்… ( பூமி தினம் ஏப்ரல் 22)

0
17

அழிவை நோக்கி அண்டம்… …

இயற்கையை எதிர்த்தால்
அழிவென்று அறிந்தும்
செயற்கை வாழ்வில்
செயலிழந்து போனதால்
காலநிலை மாறிப்போக
காடுமேடு காஞ்சி போக
மழையின்றி மன்றாடுகிறோம்…

கரும்புகைகளினூடே
பூமிதாயின் சுவாசமதை
நெருப்பு கனலெனவே மாற்றிடத்தான்
எத்தனிக்கின்றீர்…
சுவாசமின்றி நுரையீரல் விம்மி வலிக்க
கழுத்தருகே உயிர்குழி துடிக்க
உடல் விறைத்து விறகுக்கட்டையாய்
அந்தரத்தில் மிதக்கிறது…
சுவாசமற்று தவிக்கிறது பூமி…

பூமி பந்தை சாக்கடையாக்கி
நிலவினில் நீர் தேடும் விசித்திரம்
இங்கே தான் அரங்கேறுகிறது…
பிளாஸ்டிக்கின் பிசகுகளில்
பூமிபந்தை புதைத்தொழித்தீர்…
விஞ்ஞானம் என்ற பெயரில்
நீர் விதைத்ததெல்லாம்
விஷமென்றறிந்தீரா?…

மொத்தத்தில் சொல்ல போனால்
அழிவை நோக்கி பூமி
அதற்கு காரணம்
மனிதன் தான் சாமி…

-சசிகலா திருமால்
கும்பகோணம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here