அல்வா வரலாறு

0
63

தமிழ்நாட்டில் பல்வேறு ஊர் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. அதில் நெல்லை என்ற திருநெல்வேலியும் ஒன்று. திருநெல்வேலி என்றவுடனே நமக்கெல்லாம் சட்டுன்னு தோணுவது திருநெல்வேலி அல்வா தான். இந்த திருநெல்வேலி அல்வா திருநெல்வேலியில் மட்டுமில்லை உலக அளவில் புகழ் பெற்றுள்ளது.

திருநெல்வேலி அல்வா

இத்தகைய அல்வாவுக்கு பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்கு. பாக்கலாமா..? இந்த அல்வா ராஜஸ்தான் மாநிலத்தில் அந்த மக்களால் செய்யப்பட்டது. இந்த இனிப்பைசெய்யும் அந்த மக்கள் ராஜ்புத்ராஸ் என்று அழைத்தனர். அந்த மக்கள் திருநெல்வேலி ஜமின்தார் அவர்களுக்கு சமையல் செய்ய சொக்கம்பட்டி வந்தனர். அவர்களின் மூலமே அங்கு அல்வா செய்யப்பட்டது.

இந்த அல்வா 19-ம் நூற்றாண்டில் தெரு தெருவாக விற்கப்பட்டது. பின்பு 1882-ம் ஆண்டில் திரு. ஜெகன் சிங் அவர்களால் திருநெல்வேலியில் ஒரு கடை அமைக்கப்பட்டு அதற்கு திருநெல்வேலி அல்வா கடை என்று பெயர் சூட்டினர். இந்த கடை தான் இந்த அல்வாவுக்கு தந்தை என்றே கூறலாம். இந்த அல்வாவிற்கு சலிவா என்ற ஒருவர் அடிமையாகி அவரால் ஆரம்பிக்கப்பட்டதே “இருட்டுக்கடை”. இந்த பெயரே தற்போது வரை பெரும் புகழும் பெற்று விளங்குகின்றது.

இந்த கடையிலே அல்வாவின் தரம் உயர்ந்துள்ளது. அன்று முதல் இன்று வரை இந்த இருட்டுக்கடை அல்வாவின் பெயர் சற்றும் குறையவில்லை. இன்னனுமும் இந்த கடையில் 40வாட்ஸ் பல்பே உபயோகப்படுத்தப்படுகிறது.

அல்வாவில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் கேரட் அல்வா, பாதாம் அல்வா, கேசரி அல்வா, வட்டல்ல அப்பம், பைனாப்பிள் அல்வா, பால் அல்வா, பீரூட் அல்வா, தர்போசனி அல்வா, ஆப்பிள் அல்வா, சோளம் அல்வா, பப்பாளி அல்வா, மாம்பழ அல்வா, ரவை அல்வா, பூசணி அல்வா, சேமியா அல்வா மற்றும் பல அல்வா வகைகள் உள்ளன.

அல்வா பெரும்பாலும் கோதுமை மற்றும் சர்க்கரையால் செய்யப்படும் ஒரு வகையான இனிப்பு பொருள். இந்த அல்வா தமிழ் நாட்டில், இந்தியா அளவில் மட்டும் பிரபலம் இல்லை. அல்வா கிழக்கிந்திய நாடுகள், வடக்கு ஆசியா, மத்திய, தெற்கு, மற்றும் மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா நாடுகள், ஈரோப்பிய நாடுகள், மற்றும் மாளத்திய, அரேபிய நாடுகளிலும் இந்த அல்வா பிரபலம் தான்.

இந்தியாவில் கேரள மாநிலத்தில் அல்வாவை அலுவா என்று அழைப்பர். இந்த அல்வா கேரள மாநிலத்திலுள்ள கோழிகோட்டில் பிரபலம் இந்த கோழிகோடு அரபிக் கடலுடன் இணைந்திருப்பதால் இதனை அரேபிய நாடுகளில் கோழிகோடன் அல்வா என்று அழைப்பர்.

கர்நாடக மாநிலத்தில் பிராமின் திருமணத்தில் அல்வா பாரம்பரிய இனிப்பு வகைகளில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இந்த அல்வாவின் பெயர் காஷி அல்வா.

இத்தகைய அல்வாவை தயாரிக்க குறைந்தது 3 மணி நேரமாவது ஆகும். தமிழ் நாட்டில் அல்வா என்றாலே அது திருநெல்வேலி அல்வா தான். இந்த அல்வா ராஜ்புட் அல்வா என்றும் அழைக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here