அரை நூற்றாண்டுத் தமிழ் அமைதியாகிப் போனது!

0
25

அமுதே தமிழே
அழகிய மொழியே எனதுயிரே

தேனூறும் தேவாரம்
இசைப் பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே
நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயில வரும்
அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு!

– பாப்பாக்குடி கவிஞர் இரா செல்வமணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here