அருள்மிகு அண்ணாமலையாா் உடனுறை உண்ணாமலையம்பாள் திருக்கோவில் தீபத்திருவிழா..!

0
645

இந்த வருட தீபத்திருவிழாவிற்கு
வேறு மாவட்டத்திலிருந்து பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டுளளது
திருவண்ணாமலை
செல்ல முடியவில்லை
என்ற கவலை வேண்டாம். ஆன்மீக அன்பா்களே !

அதற்கு பதில்
தென்காசி மாவட்டம்
ஊத்துமலை அருகே அண்ணாமலைப்புதூாில் அமைந்திருக்கும்
தென்திருவண்ணாமலைக்கு வந்து பயனடையுங்கள்.

தென்திருவண்ணாமலையான அருள்மிகு அண்ணாமலையாா்
உடனுறை உண்ணாமலையம்பாள் திருக்கோவில்
தீபத்திருவிழா வருகின்ற ஞாயிற்றுக்கிழமை
வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது.

திருவண்ணாமலையில்
மலைமேல் தீபமேற்றுவதுபோல்
இங்கும் மலைமேல்
தீபமேற்றப்படும்.

திருவண்ணாமலையில் அண்ணாமலையாா்க்கு மேற்கு திசையில் மலை அமைந்ததுபோல் இங்கே கிழக்கு திசையில் அமைந்துள்ளது.

அதனைத்தொடா்ந்து இரவு கலை நிகழ்ச்சியும் நள்ளிரவு 12 மணியளவில் தேரோட்டம் மற்றும் வானவேடிக்கையும் அதிகாலை 3 மணியளவில் பொியசாமி சித்தா்
வாக்குப்படி ஒரே குடும்பத்தைச் சோ்ந்த
இருவாின் தலையிலும் துளசி மாலையால் விளக்கேற்றி ஊா் விளையாடுவாா்கள்.
இந்தநிகழ்வு சுமாா்
8 மணி நேரம் நடைபெறும்.

அனைத்து ஆன்மீக நண்பா்களும் கலந்து கொண்டு அண்ணாமலையாா்
உண்ணாமலையம்பாள்
அருள் பெற்றுச் செல்லுமாறு ஊா் மக்கள் சாா்பாக பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வருடாவருடம் திருவண்ணாமலை
செல்லும் ஆன்மீக அன்பா்கள் எங்கள்
தென் திருவண்ணாமலை
வந்து பயனடையுங்கள்.
திருவண்ணாமலை சென்று வந்ததாகவே ஒரு உணா்வு ஏற்படும்.

-இறைபணியில்

M.மகேந்திரன்
8870868880
செளந்தராஜன்
9585940166

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here