அருமையான வரிகள்

0
89

*ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்….

*நாளை என்பதே நமக்கு உறுதியில்லை…
நாளும் அது புரிவதில்லை

*பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.

*இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்…
ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை…!

*நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ..

*நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட …,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ….

*வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,
மனஅமைதியையும் தேடுங்கள் …
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை

*இனி எதற்கும் “ஏன்” என கேள்வி கேக்காதே என்று சொன்னால் ….
அதற்கும் … “ஏன்” என்று தான் கேட்பாள் இந்த பெண் .

*அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே …
இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?

*சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது …
15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

*கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

*வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.

*வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்… அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்…

*மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால் …
அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் …

*எத்தனை காலம் கடந்தால் என்ன…. சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை…..

*இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாது ….ஏனெனில் …
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் …

*பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.

*தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!

*சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து
உனைசீரழிக்கும் துரோகியைவிட …
முறைத்துக்_கொண்டே – உன் முன்னிருக்கும்
எதிரி_மேலானவன் !…..

*அவ்வளவுஎளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட இயலவில்லை….
பிரிவு என்ற பெயரில் கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது

*உனக்காக… தன் மீதான நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால்
ஒருபோதும் இழந்து விடாதே..

*அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது
கிடைப்பதில்லை…

*பேரின்பம் வேண்டாம்…
சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க………

*நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை
விட நம் காதுகளை மூடிக்கொள்வது
மிகச் சிறந்தது……

*வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

*புன்னகை பிரச்சினைகள் “வருவதை தள்ளி போடும்..!!
மெளனம் “பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
எல்லா “பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!

*அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது…..

*வாழ்வோடு போராடிச் சாவதிலும்
சாவோடு போராடி வாழ்வதிலுமே…
வாழ்க்கை முடிந்துவிடுகிறது…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here