அரசுப் பணி என்பது ஆத்ம திருப்திக்காகன பணி என்று பணியாற்றும் சைனி பிரசாத்.

0
99

அரசுப் பணி என்பது சம்பளத்துக்கான விஷயம் மட்டுமல்ல. ஆத்ம திருப்திக்காகவும்தான் என்ற லட்சியத்தோடு வாழும் சைனி பிரசாத்.

கரோனாவால் உயிர் இழந்தவர்களை நெருங்கிய சொந்தங்களே அடக்கம் செய்ய அச்சப்படும் சூழலில் கேரளத்தில் பெண் அதிகாரி ஒருவர் துணிச்சலாக அதைச் செய்துவருகிறார். மனம் உருகப் பிரார்த்தனை செய்து, உறவுகளின் உணர்வுக்கு மதிப்புக் கொடுத்து அவர் செய்யும் செயல் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் இளநிலை சுகாதார ஆய்வாளராக இருப்பவர் சைனி பிரசாத். திருவனந்தபுரத்தில் உள்ள கரோனா வார்டில் உயிரிழக்கும் நோயாளிகளை, மாநகராட்சிக்குச் சொந்தமான மின் மயானத்தில் சைனி பிரசாத் தலைமையிலான குழுவினரே கொண்டு சென்று எரியூட்டுகின்றனர். பெண்ணாக இருந்தாலும் சவாலான இந்தப் பணியை மிகவும் தைரியமாக எதிர்கொள்கிறார் சைனி பிரசாத்.

இதற்கு முன்பு கோழிக்கோடு மாவட்டம், வடகரை நகரசபையில் பணி செய்தார் சைனி பிரசாத். அப்போது, ஆதரவின்றி இறக்கும் பலரது உடல்களை எடுத்து நல்லடக்கம் செய்துள்ளார். அரசுப் பணி என்பது சம்பளத்துக்கான விஷயம் மட்டுமல்ல. ஆத்ம திருப்திக்காகவும்தான் என்ற லட்சியத்தோடு வாழும் சைனி பிரசாத்துக்கு பாராட்டுகளும் .
வாழ்த்துக்களும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here