அயல் நாட்டு வாழக்கை…

0
22

வறுமைக்கோடு
வார்த்தெடுத்த பாதை
அன்னியச் செலாவணிக்கு
அழைத்து போனது அவனை

புற்றீசல் போல
புறப்பட்ட தேவைகளில்
தீரவேயில்லை தேடல்கள்

வளர்த்தெடுத்த
பாட்டி சாவின் ஓலத்தையும்
பெற்றெடுத்த பிள்ளையின்
சிரிப்பையும்
தொடுதிரையில் கண்டு
துவண்டு கிடக்கிறான்.

அவன் துணை
ஆறாண்டாய் தனியே
உழல்கிறாள் எனக்
கணக்கெடுத்துக்
கண்ணீர் வடிக்கும்
வேவையில்லா வெட்டி
காசைத் திண்ணும்
கழுகாகி அலைகிறது.

அன்பு,
காதல்
பாசம் எனும்
எந்த சுகமும் இல்லாமல்
அனுபவிக்கும்
ஆசையோடு
காயசண்டிகையின்
பெரும் பசி கொண்டு
ஓயாது உழைத்தனுப்பும்
வியர்வையை உறிஞ்சும்
ஆசை கொள்ளாதே

அவன்
உணவு உறைவிடம் வேலை
ஒருமுறை பார்
அவளுக்கும்
உன்
பங்காளிக்கும்
படத்தையேனும்
பகிர்ந்து விடு

அவன்
வாழ்வை
அவனே வந்து
வாழட்டும்

-சிவபுரி.சு.சுசிலா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here