அமெரிக்காவை சேர்ந்த ‘பைசர்’, ஐரோப்பியாவின் ‘பயோஎன்டெக்’ ஆகியவற்றின் கொரோனா தடுப்பு ஊசி பரிசோதனை..!

0
72

அமெரிக்காவை சேர்ந்த ‘பைசர்’, ஐரோப்பியாவின் ‘பயோஎன்டெக்’ ஆகியவற்றின் கொரோனா தடுப்பு ஊசியை மனித உடலில் செலுத்தி செய்யப்பட்ட பரிசோதனை சிறந்த பலனை கொடுத்துள்ளது. சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகள், கொரோனா தொற்று காரணமாக உயிர்ச்தேசம் மட்டுமின்றி பொருளாதார அளவிலும் கடுமையாக பாதித்துள்ளன. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் பல உலக நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள், இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த ‘பைசர்’ நிறுவனமும், ஐரோப்பியா சேர்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனமான ‘பயோஎன்டெக்’ ஆகியவை இணைந்து கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டன. அதில், தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இது  மனித உடலில் செலுத்தி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான உடல்நிலை கொண்ட 18 வயது முதல் 55 வரையிலான 45 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, பக்க விளைவுகள் இல்லாமல் மனிதர்களுக்கு நன்றாக ஏற்றுக்கொள்கிறது, நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகிறது என கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம், கொரோனாவுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே ‘சங்கு ஊதும்’ வகையிலான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் அமெரிக்கா முக்கிய கட்டத்தை அடைந்து விட்டதாக கருதப்படுகிறது.

அதிகளவில் ஆன்டிபாடி

  • இந்த தடுப்பூசியால் மனித உடலில் கடுமையான, பாதகமான பின்விளைவுகள் எதுவும் நடக்கவில்லை.
  • தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் உடலில் அதிகளவில் நோய் எதிர்ப்பு செல்கள் (ஆன்டிபாடி) உருவாகின்றன.
  • கொரோனா நோயால் பாதித்து குணமானவர்களின் உடலில் உள்ளதை விட, தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு ஆன்டிபாடிகள் அதிகமாக இருக்கிறது.  
    –  விஞ்ஞானிகள்

இந்தியா புதிய திட்டம்
கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியாவும் தீவிரமாக இருக்கிறது. இதற்காக, ‘மருந்து கண்டுபிடிக்கும் கூட்டு முயற்சி’ என்ற புதிய திட்டத்தை நேற்று அது தொடங்கியது. மத்திய மனித வள மேம்பாட்டு துறையும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன. இதில் பங்கேற்கும்படி இளம் ஆராய்ச்சியாளர்கள். மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here