அன்பை நிரந்தரமாக்குவோம்…!

0
230

அன்பின் உருவம் அன்னை தெரசா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை,
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்”  – அன்னை தெரசா

இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை, மாற்றம் ஒன்றே மாறாதது, என்ற நிரந்தரமற்ற சிந்தனை வரிகளை நாம் நிரந்தரமாக்குவோம்…!
எப்படி?
அன்பு என்பது பல உருவங்கள் கொண்டது. ஒரு தாய் மகன் மீது வைத்திருக்கும் அன்பு, தந்தை மகள் மீது வைத்திருக்கும் அன்பு, குழந்தைகள் பெற்றோர் கள் மீது வைத்திருக்கும் அன்பு, உடன்பிறந்தோர் அன்பு, உறவுகளுக்கு இடையிலான அன்பு, காதலன் காதலிக்குள் இருக்கும் அன்பு,
நண்பர்களுக்கிடையே நட்புக்குள் இருக்கும் அன்பு, என்று,அன்பு பல உருவங்களால் வேறுபட்டாலும், உணர்வுகளால் ஒன்றுபட்டது. இந்த உலகில் காற்றைப்போல் அன்பு எங்கும் பரவி இருக்கிறது, காற்றை விட லேசானது மனசு.
அந்த மனசு காயம் அடையும்போது, சாய்ந்து கொள்ள ஒரு தோளும், கண்ணீர் துடைக்க ஒரு கையும், ஆதரவான ஒரு வார்த்தையும், இருந்தாலே போதும் ஆகாயத்தையே எட்டிப் பிடிக்கலாம். சந்தோஷமாக இருக்கும் தருணங்களில், சந்தோசங்களை அன்பானவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது அந்த சந்தோஷம் இரட்டிப்பாகும். அதே சமயம் நாம் கஷ்டமாக இருக்கும் தருணங்களில் நமது கஷ்டங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது நமது கஷ்டங்கள் குறைந்துவிடும். இப்படி நம்ம வாழ்க்கையில் ஒவ்வொரு நகர்விலும் அன்பு வைத்திருப்பவர்களோடு நாம் பயணிக்கிறோம். எல்லோரின் வாழ்க்கையிலும் தன்னுடைய சந்தோசங்களையும், கஷ்டங்களையும் பகிர்ந்துகொள்ள ஒரு அன்பான உறவு தேவை. “இந்த உலகில் நீங்கள் யாராகவும் இருக்கலாம், ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள் தான் உலகம்” என்ற ஒரு அருமையான பொன்மொழி உண்டு.ஒரு உறவு இருக்கும்போது தெரியாது அவர்களின் அன்பு, அந்த உறவை இழந்த பின்புதான் தெரியும், அவர்களின் அன்பு இன்றி நாம் அனாதையாக்கப்பட்டோம் என்று. இந்த உலகத்தில் உங்களை மட்டுமே உலகமா நினைத்து அளவுகடந்த அன்போட வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு உங்களை விட்டால் வேறு வழியில்லை என்று கூட சொல்லலாம். இப்படி வழி இல்லாமல் இருப்பவர்களுக்கு பாதையாக இருந்து வழி காட்டுவது உங்கள் அன்பு மட்டுமே.முதன்முதலில்
நாம் ஒருவர் மீது வைக்கும் அன்பு, எவ்வளவு அளவுகடந்து இருக்குமோ அதே அன்பு காலங்கள் பல கடந்தாலும், பல பிரச்சனைகளையும், சிக்கல்களையும் சந்தித்தாலும் எப்பவும் எதற்காகவும் மாறாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், நம்மை விட்டு விலகாமல் நம்பி இருக்கும் . அந்த அன்பே உண்மையான அன்பு. அந்த உண்மையான அன்பை விட்டு விலகி விடாதீர்கள்!
‘அது கொலை செய்வதை விட கொடுமையானது’.
எவ்வளவு பிரச்சனைகளும் சிக்கல்களும் வந்தாலும் சமாளிப்பதற்கு ஆயிரமாயிரம் வழிகள் இருக்கும். ஆனால் அன்பான இதயத்தை மட்டும் அனாதையாக்கி விடாதீர்கள்.. !
நாம் பிறர் மீது வைத்திருக்கும் அன்பும், பிறர் நம் மீது வைத்திருக்கும் அன்பும் என்றுமே நிரந்தரம் என்ற மந்திரச்சொல்லோடு வாழ்ந்து பாருங்கள்.. ! அன்பான உறவுகளுக்கு இடையே எந்த பிரச்சனைகளும், சிக்கல்களும் வந்தாலும் அவர்களை விட்டு விலகாமல் நிரந்தரமான அன்போடு வாழ்வதற்கு பழகி கொள்ளுங்கள். ஏனென்றால், அன்பை விலைக்கு வாங்கவும் முடியாது .விற்கவும் முடியாது .அது எப்போதும் நம்மோடு தான் இருக்கும். நம்மை விட்டு விலகாது. அன்பு என்பது அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் குறையாத அட்சய பாத்திரமாகும். இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என்ற எதிர்மறை எண்ணங்களை விலக்குவோம்.அன்பை மட்டும் விதைப்போம். பாசத்தை உரமாக்கும். அன்பான உறவுகளை உருவாக்குவோம். அன்பை மட்டும் நிரந்தரமாக்குவோம்..!
ஆகஸ்ட் 26,அன்னை தெரசா அவர்களின் பிறந்த நாளில் இந்த கட்டுரையை வெளியிடுவதில் மகிழ்ச்சி வானொலி குழுமம் பெருமை அடைகிறது.

   -அன்புடன்

     உங்கள் சிநேகிதன்,

     ஜெ. மகேந்திரன்,

     மகிழ்ச்சி வானொலி குழுமம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here