அன்னையர் தின வாழ்த்து

0
29

#அன்னையர் தின வாழ்த்து

பாசத்தின் கடல் என்பேன்!! பரிதவிப்பில் கார்மேகம் என்பேன்!! தேசத்தில் வாசமலர் என்பேன் !
நிஜத்தில் அன்னை ஓர்தெய்வமென்பேன்

நான் தடுக்கி விழ சம்மதிக்காதவள்!
தான் தறி கெட்டுப் போன நிலையிலும் கூட!!
தன் பிள்ளையை பிறரிடம் விட்டுக் கொடுக்காதவள்! தன்னலம் மறந்தவள் தன் குடும்ப நலம் தாங்கும் நிலம் அவள்!!

கன்னிப் பருவத்தில் மலம் கண்டு மலைப்பவள்
கன்னிதாயாய் மாறிய போது !!தன் பிள்ளை மலம் மலை யளவே ஆனாலும் கழுவ தயங்காதவள்!!

கணவனை இழந்தவள் !தன் பிள்ளைகளுக்காக
கர்வம்மிளந்து கனிவாய் எந்த பணியையும் எதிர் கொள்கிறாள்!!

தன் பாசப்பறவைகள் சிறகடிக்க !
தன் ஆடம்பரங்களை தனி சிறை வைக்கிறாள்!!
தான் அன்னையர் தின வாழ்த்து பெறும்போதும் !! தன் அன்னையை முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல் பாதுகாத்து!! சிறப்பிக்கிறாள்! சிறந்த அன்னை இவளுக்கு!! அன்னையர் தின வாழ்த்துக்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here