அத்தான்

0
153

கூழாங் கற்களால் பதித்த நடந்து பழகிய வழித்தடம் பாதை எங்கும் ஒரு பக்கமாக வெட்டி எடுக்கப்பட்ட செம்மண் மேட்டில் பாசி படிந்த நீர்சொறிந்த காட்டுக் கொடிகள் மறுபக்கம் உன்னிச் செடிகளில் பூத்துக் குழுங்கும் மனம்;விண்ணை முகடு தொட்டு நிற்க்கும் யூக்கலிப்டஸ் வனம் சோலைக்காடு சவுக்கு இலைகளின் மொத்தல்,தைல வாசனை கலந்த காற்றுவெளி பச்சை வண்ணம் தறித்த தேயிலை குன்றுகள் வாழ்ந்து கழித்த மலையக தொகுப்பு வீடுகள், பாய்ந்தோடும் வற்றாத காட்டு ஆறு, உண்டு உறங்கிய காலங்கள் எல்லாம் வீணாகிப் போச்சு
ஆண்டு அனுபவித்து பரவசப்படும் உலகத்தில்,மகிழ்ச்சியின் உச்சத்தில் வைத்திருந்த தன் மகளை பிரசவத்தில் பரிகொடுத்த துக்கத்தில் இருந்த ஓர் இரவில் மண்ணெண்ணெய் திரி வெளிச்சத்தில் கிழ அனாதைகள் ஒரு முடிவு எடுத்துக் கொண்டார்கள். அத்தான் இந்த உலகத்தில் நாம் எவ்வளவு நாள் வாழ்ந்தாலும் இனி நம்ம சந்ததியின்னு ஒன்னும் இல்லை. “சரி இருக்கட்டும்” விதை இல்லாத காட்டு மரமாய் தானாக சாகும் வரை வாழ்க்கையை வாழ்ந்து கழிப்போம்.

அத்தான் ஆண்டவன் புண்ணியத்தில் நீங்க உயிரோடு இருக்கிற வரைக்கும் நானும் இருக்கனும் உங்களுக்கு முன்னால் எனக்கு எதுவும் ஆகக் கூடாது. ஏனென்றால் நான் முந்திட்டால் உங்களுக்கு யார் இருக்கா? சொல்லுங்க ஒரு ஆம்பள யார் கிட்ட போய் நிக்க முடியும் அத நெனச்சாத்தான் எனக்கு தாங்கிக்கிடவே முடியல, அப்படி ஒரு வேளை நீங்களோ, இல்ல நானோ முந்திட்டால் அடுத்தவர் பின்னாலேயே வந்திரடனுமின்னு ஆசைப்படுதேன். என்ன? நான் சொன்னதில எதுவும் தப்பு இருக்கா அத்தான். பின் கிழவியின் கேள்விக்கு இரவின் மொழியே பதிலாக இருந்தது.

நேரமும் காலமும் உருண்டோடியது அன்று கிழவிக்கு உடம்பு என்னவோ போல் இருந்தது, “கணத்த நாளுமில்லை” காய்ச்சல் மண்டையடி இல்லை, ஏனோ கிழவியின் கண்களுக்கு என்னென்னவோ தெரிந்தது. ஈர்ப்பு விசை இல்லாத கணமற்ற உடலாய் உணர்ந்தவளாய் மிதந்தாள். இறகு முளைக்காத தேவதையாய் மலர்கள் நிறைந்த தெளிந்த நீரை அள்ளி ரசித்து குளித்து மனம் கமலும் தன் குடிசையில் ரெங்கு பெட்டியை திறந்து கண்கள் ஒளிர மினுங்கும் எளிய பட்டுச் சேலையை எடுத்து கட்டிக்கொண்டு, தன் புருசனுக்கு பிடித்த மாதிரி எளிமை மாறாத கிழட்டு தேவதையாய் அழகுபடுத்திக் கொண்டு பட்டாம் பூச்சியாய் பறந்த மனதோடு படுத்துக் கொண்டாள் கண்களை மூடினாலும், திறந்தாலும் என்றும் போல் இல்லாமல் அன்று மிக அழகாக உணர்ந்தாள் ஆசை ஆசையாக புருசனுக்காக காத்திருந்தாள்.

புது குடிகாரனாக அன்று வீடு வந்து சேர்ந்த கிழவன் கிழவிக்கு தெரியக் கூடாது என பம்மி பம்மி வீட்டுக்குள் சிறு அனக்கம் இல்லாமல் போனான் எதுவும் பேசவில்லை கிழவிக்கு தெரிஞ்சா மனசு சங்கடப்படுவாள் என தனக்குத்தானே பேசிக்கொண்டு இடம் மாறி படுத்துக் கொண்டான்.

முழுமையாக கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டுவிட்டால் கிழவி. மென் குளிரிலும் கம்பளி போர்த்தாமல்,ஒய்யாரத் தோரணையில் படுத்திருந்ததை கவனித்தும் ஏனோ கிழவி தூங்கிவிட்டாள் என நினைத்து போதை தலைக்கேரிய உடன் சொர்க்கத்தில் கலந்த கிழவனும் தூங்கி போனான்,கிழவனைப் பற்றி கிழவியும், கிழவியை பற்றி கிழவனும் ஒரு நாளும் இல்லாத திருநாளாய் சாப்பிட்டாயா என்று கூட கேட்கவில்லை தங்களை மறந்தார்கள்.

நடு சாமத்தில் வினோத சத்தத்தில் விழித்துக் கொண்ட கிழவன் கிழவியின் அகழொழியற்ற பேச்சை உணர்ந்தான். அத்தான், அத்தான் என கூப்பிட்டாள். முகமெல்லாம் பளிச்சென தெரிந்த அரிக்கன் விளக்கு வெளிச்சத்தில் கிழவனின் முகம் மாறியது. அறையில் திரவிய வாசனையை உணர்ந்தான். முத்து முத்து என கூப்பிட்டான் முகம் வியர்த்து ஒழுகியது, அத்தான் எனக்கு ஒரு ஆசை என்னனு கேளுங்க அத்தான் என்றாள். சொல்லு,முத்து என்றான் கிழவன் கடைசியா ஒரு முத்தம் கொடுங்களேன், எனக்கு ஆசையாக இருக்கு என சொல்லியவள் சிரிக்கவும் செய்தாள்,கண்ணில் நீரும் வடிந்தது.

நம் ஆசை மகள் உங்கள் முத்தத்தை எதிர்பார்த்து காத்திருப்பாள்.இதை விட கொடுப்பதற்க்கு நம்மிடம் வேறு எதுவும் இல்லை என்று கண்ணீர் வடித்தாள். முத்து உடம்புக்கு என்னாச்சு, ஏன் இப்படி பேசுற என்னடி ஆச்சு என கண்ணீர் விட்டான்.
என் கண்ணுக்கு இதுவரை பார்க்காத இடமாக தெரியுது, பொன்னுலகமாய் மின்னுது. மஞ்சலாய் ஜொலிக்குது. மனிதர்கள் யாரும் கண்ணுக்கு தெரியல நறுமணம் வீசும் மலர்களாய் பூத்துக் குலுங்கும் வனமாய் தெரியுது. பஞ்சு மெத்தை விரிப்பாக புல்கள் அதில் நடந்து செல்லும் கால்தடம் தெரியுது அத்தான்.

ஒரு காலத்தில் நாடகமேடையின் பின்புலத்தில் நட்டிய நிஜ மரத்தின் கிளையில் விளைந்த பணம் தொங்க மோகன தோரணையில் முத்து மீனாள் நின்று கொண்டிருக்க வண்ண வண்ண அலாஜின் வெப்ப ஒளி வெளிச்சத்தின் பின்னணியில் மரத்தை உலுக்கியவுடன் பணம் உதிர,தங்க,வைரங்கள் ஜொலிக்க “பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்” பிண்ணனி பாடலுக்கு தன் மேனியின் அங்க அசைவுகளை நலினமாக வெளிப்படுத்தியதில் மயங்கிய சுந்தரம் கெஞ்சிக்கூத்தாடி முதல் முத்தம் பதித்தவன் இன்று கடைசி முத்தத்தை குழந்தைதனத்துடன் கொடுத்து முடித்தான்.

அத்தான் அத்தான் என கையை இறுகப் பிடித்தாள். நான் போனதுக்கு பிறகு யார் வீட்டுக்கும் போகாதீக, எது கொடுத்தாலும் வாங்காதீக, சொந்த பந்தமின்னு சொல்லிக் கொண்டு உரிமை கொண்டாடினாலும் நாலு நாளைக்குத்தான் யாவகம் வைச்சுச்கோங்க என தன் நீண்ட பார்வைக்கு பின் மெல்ல கண்களை மூடினாள். இதை தன் மடியில் கிழவியின் தலையை வைத்து புத்தி பேதலித்து செய்வதரியாது பார்த்தக் கொண்டிருந்த கிழவன் செயல் இழந்து போனான்.

கிழவன் அந்த உறக்கத்தை ஏற்றுக் கொண்டான். இரவு முழுவதும் ரசித்தான். விடிந்தது காலை அதன் போக்கில் எந்த மாற்றமும் இல்லை,கிழவன் கதவை திறந்து தேம்பி தேம்பி அழுதான். தகவல் தெரிந்த தோட்ட நிர்வாகம் சங்கு அடித்து அரைநாள் துக்கம் அனுசரித்தது.

-பாண்டி.சசிகுமார்
பெரும்பத்தூர்
சங்கரன்கோவில் – 627756.
தென்காசி மாவட்டம்.
தமிழ்நாடு.
செல்: 9952533779.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here