அதிசய கோவில் தெற்கு கருங்குளம் ‘பூ’ சாஸ்தா கோயில்
திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கோடி பகுதியில் அமைந்துள்ள ஊர் தெற்கு கருங்குளம்.
இங்கு …..‘பூ’ சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர பெருவிழாவில் ஆண்களே தயாரித்து ஆண்டவனுக்குப் படைக்கும்….. கொழுக்கட்டை வழிபாடு பிரபலம்.
இந்த ஆலயத்தில் அதிசய மரம் ஒன்று உள்ளது.
பங்குனி உத்திர நாளை ஒட்டி சில நாட்கள் மட்டுமே இந்த மரம் பூத்துக் குலுங்கும். இந்த பூ மரத்தின் நிழலில் தான் இங்குள்ள சாஸ்தா அருள்பாலிக்கிறார்.
இந்த மரத்தின் மலர்களைச் சேகரித்து தேங்காய் எண்ணெயில் போட்டால் அது சிவப்பு நிறமுடைய மணமிக்க எண்ணெயாக மாறும்.
இந்த எண்ணெய், தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து.
அத்துடன் அதனை தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி அடர்த்தியாக கருகருவென வளருமாம்
அகத்தியர் ஞானம்
நற்பவி