அண்ணன் உறவிற்கு ஏங்கும் சில பெண் உறவுகள்

0
129

அண்ணன் உறவிற்கு ஏங்கும் சில பெண் உறவுகள்

பெருமையில் பெருமிதம்! எங்கள் தாய் தந்தைக்கு
பெரும் வருவாய் பெண்களாய் பிறந்தோம் பேரன்பின்நிமித்தம்!!

அன்பில் குறைவில்லை!! வளமையில் குறைவில்லை!!

அன்பு சோலை பூக்களில், பூத்து குலுங்கினோம்!!

தந்தை படும் துயரில் தலைமகனாய்!!
தான் பிறக்கவில்லையே என்ற அக்கா வின் ஏக்கம்!!

பாசம் காட்ட மென்மைதேகம் கொண்டோம்!!
பலம் காட்ட அப்பாவிற்கு ஆண் பிள்ளையாகவில்லையே!!

எங்கள் பகைவரை விரட்டும்!
எங்கள் அப்பாவிற்குஅடுத்து
அப்பாஸ்தான அண்ணன் இல்லை யே!!

வம்பு வழக்குபேசி வரம்புமீறி!
வம்பன் வருகையில்_கூர்
வாள் கொண்டு வீசாவிட்டாலும்_ அறிவு
வாள் கொண்டு ஆறுதல் சொல்லிஅதட்ட!!
ஆசைக்கோர் அண்ணன் இல்லை யே!!

எங்கள் இல்வாழ்க்கையில்? எங்கள், பிள்ளைகளுக்கு!!
ஏகாந்தமாய்! தாய் மாமன் வரிசையில்
எழுச்சியோடு!! மகிழ்ச்சியோடு!!
சீர் செய்ய அண்ணன் இல்லை யே!!

இருளென்றும் பனியென்றும்!!
இடியோடுகூடியமழையென்றும் !!தேவையில்
அவரசரபயணத்திற்கு
உதவ அண்ணன் இல்லாதாது !!

அண்ணன் கோவிலுக்கு ஏங்கும் தங்கையின் பாச தீபங்கள்!!

– கவிதை மாணிக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here