அண்டம் காக்கையை, பணம்வாங்கி! சிறைப்படுத்தாதே!!

0
35

கொள்ளை பணநதி பாய்ந்துவர!
கொள்கை மனநதி! மாய்ந்துவர!

குடும்பத்திற்காய் அணை போட்டவன் பலபேர்!!

சுயநலத்திற்காய் அள்ளிகுடிப்பவன் சிலபேர்!!

கொள்கைக்காய் நீர்பாச்சுபவன் சிலபேர்!!

நீதியை மறந்து!
சல்லிகாசுக்காய் நதியில், நக்கிகுடிப்பவர் நாமாக மாறினோமே!!

அண்டம் காக்கையை, பணம்வாங்கி! சிறைப்படுத்தாதே!!

நீ குழிக்குள் புதைபடுவதை மறந்துவிடாதே!

தகப்பன் கட்டிய வீடென்று!
சாம்பல்கூட அள்ளாது அடுப்பெரிப்பாயா!

உனக்காய் மாற்றும் உன்னால்!!
உனக்காக மாற்றம் காண போராடு!

-கவிப்பிரியன்
 கவிதை மாணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here