அக்டோபர் 15 – திண்ணைக்குழுவிற்கு இரண்டாம் ஆண்டு துவக்க விழா வாழ்த்துக்கள்…!

0
148

திண்ணைக் குழுவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இரண்டு வாரங்கள் நண்பர்களோடு பயணித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அந்த இரண்டு வாரங்களில் திண்ணைக்குழு (புலனக்குழு) செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

குழுவில் அனைவரும் முழு ஒத்துழைப்புடன் தங்களின் படைப்புகளை பகிர்ந்து வருகின்றனர். அத்தனை படைப்புகளும் பயனுள்ள படைப்புகள். இந்த படைப்புகளுக்கு வாக்கெடுப்பு நடத்தி சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுப்பது தனிச்சிறப்பு அதிலும் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும், பாராட்டுக்களும் வழங்குவது கூடுதல் சிறப்பு. ஒத்த கருத்துகள் கொண்ட நண்பர்களின் ஒரு மையமாக இருந்து செயல்படும் ஒரு சிறப்பான குழு நம் திண்ணைக் குழு என்பதை மன மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

தின்ணைக்குழு பல படைப்புகளை உருவாக்குவது மட்டும் அல்லாமல் சேவை மனப்பான்மையோடு பல சேவைகள் செய்து ஆதரவு கரம் நீட்டுவது, தங்களின் பொது நலனை காட்டுகிறது. குறிப்பாக சங்கரன்கோவில் அறக்கட்டளை மூலமாக ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து பசியை போக்கியது திண்ணைக் குழு நண்பர்களின் கருணை உள்ளத்தை வெளிக்காட்டுகிறது.

திண்ணைக் குழுவை திறன்பட செயல்படுத்திக் கொண்டியிருக்கும் நிர்வாகி சகோதரர் இராசகோபால் அவர்களுக்கும், மற்றும் திண்ணைக் குழு உறுப்பினர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பல படைப்பாளர்களையும், சிந்தனையார்களையும், கருணை யுள்ளவர்களையும், நல்ல மனிதர்களையும் இக்குழு உருவாக்கி வருகிறது என்பதை உள்ளன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். சிந்தனைகளின் ஏவுகணையாம் ஐயா அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் (அக்டோபர் 15) உதயமாகி இரண்டாம் ஆண்டில் வெற்றிகரமாக அடி எடுத்து வைக்கும் திண்ணைக் குழு இன்னும் பல நூறு ஆண்டுகள் வெற்றிநடை போட மனம் திறந்து வாழ்த்துகிறது மகிழ்ச்சி வானொலி குழுமம் .
வாழ்க…! வளர்க… ! வெல்க.. !

-அன்புடன்
உங்கள் சிநேகிதன்,
ஜெ.மகேந்திரன்,
மகிழ்ச்சி வானொலி குழுமம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here